கிழக்குக் கடற்கரைச் சாலை (ஆங்கிலம்:East Coast Road) அல்லது மாநில நெடுஞ்சாலை 49 அல்லது எஸ்.எச்-49 முதல்கட்டத்தில் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் சென்னை மாநகரின் திருவான்மியூர் என்னும் இடத்தையும், விழுப்புரம் மாவட்டத்தின் கோட்டக்குப்பம் என்ற இடத்தையும் இணைக்கும் திருவான்மியூர் - மாமல்லபுரம் - புதுச்சேரி சாலை ஆகும். இதன் நீளம் 147.8 கிலோமீட்டர்கள் .
கிழக்குக் கடற்கரைச் சாலை சென்னையையும் கடலூரையும் புதுச்சேரி வழியாக இணைக்கிறது. இச்சாலையில் விரைவு எல்லை ஒரு மணி நேரத்துக்கு 100 கிமீ ஆகும். இச்சாலையில் பல பொழுதுபோக்கு பூங்காகளும் சுற்றுலா ஈர்ப்புகளும் உள்ளன.
இச்சாலை வங்காள விரிகுடா கடற்கரை ஓரமாக தமிழகத்தின் தலைநகரம் சென்னையையும் கன்னியாகுமரி முனையையும் இணைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது சிதம்பரம், காரைக்கால், நாகப்பட்டிணம், திருத்துறைப்பூண்டி, அதிராம்பட்டினம், மணமேல்குடி, தொண்டி மற்றும் ராமநாதபுரம் வழியாக தூத்துக்குடி வரை நெடுஞ்சாலைத் திட்டப்பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன. சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு 690 கி.மீ தொலைவிற்கு இச்சாலை அமைக்கப்பட்டுள்ளது.
இவற்றையும் பார்க்கவும்
உசாத்துணை
வெளியிணைப்புகள்
சென்னை தொடர்புடைய சாலைகள் |
---|
அண்ணா சாலை, அரண்மனைக்காரன் தெரு, ஆற்காடு சாலை, இரங்கநாதன் தெரு, எல்லீஸ் சாலை, கல்லூரிச் சாலை, கோயம்பேடு சந்திப்பு, சர்தார் பட்டேல் சாலை, செயிண்ட் மேரீஸ் சாலை, சென்னை உயர்மட்ட விரைவுச்சாலைகள், கத்திப்பாரா சந்திப்பு, கிழக்குக் கடற்கரைச் சாலை, சென்னை புறவழிச்சாலை, சென்னைத் துறைமுகம் – மதுரவாயல் விரைவுச்சாலை, செனடாப் சாலை, தங்கசாலை தெரு, திரு. வி. க. சாலை, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, பாடி சந்திப்பு, பாரதி சாலை, பிராட்வே, பீட்டர்ஸ் ரோடு, மத்திய சதுக்கம், மாநில நெடுஞ்சாலை 2 , மாநில நெடுஞ்சாலை 49, தேசிய நெடுஞ்சாலை 45 , ராஜீவ் காந்தி சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, வாலாஜா சாலை, வண்டலூர்-மீஞ்சூர் வெளி வட்டச் சாலை |
- ↑ http://tnrdc.com/about/