அதிராம்பட்டினம் (ஆங்கிலம்:Adirampattinam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.
அதிராம்பட்டினம் பேரூராட்சியை 16 அக்டோபர் 2021 அன்று நகராட்சியாக உருவாக்குவதற்கான அரசாணையை தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் கூடுதல் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் வெளியிட்டார். அதன் பின்னர் 27 வார்டுகள் பிரிக்கப்பட்டது. அப்போது நடந்த நகரமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றிபெற்றது. நகர் மன்ற தலைவராக திருமதி.தாஹிரா அப்துல் கரீம், நகர் மன்ற துணைத் தலைவராக திரு. இராம.குணசேகரன் தேர்ந்து எடுக்கப்பட்டனர்[4][5]
மக்கள் வகைப்பாடு
இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 31066 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். அதிராம்பட்டினம் மக்களின் சராசரி கல்வியறிவு 79.31% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. அதிராம்பட்டினம் மக்கள் தொகையில் 13.08% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். இங்கு ஆண்கள் 47.95% (14897) பெண்கள் 52.04% (16169). இங்கு முஸ்லிம்கள் 70% மற்றவர்கள் 30% ஆகும்.[6]
மக்கட்தொகை
அரசியல்
இது பாராளுமன்றத் தேர்தலுக்கு தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியிலும், தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியிலும் சேர்க்கப்பட்டுள்ளது.[7]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்