திருபுவனம் கம்பகரேசுவரர் கோவில்

கம்பகரேஸ்வரர் திருக்கோயில்
கம்பகரேஸ்வரர் திருக்கோயில் is located in தமிழ் நாடு
கம்பகரேஸ்வரர் திருக்கோயில்
கம்பகரேஸ்வரர் திருக்கோயில்
தமிழ்நாட்டில் அமைவிடம்
ஆள்கூறுகள்:10°59′40″N 79°27′01″E / 10.99444°N 79.45028°E / 10.99444; 79.45028
பெயர்
பெயர்:கம்பகரேஸ்வரர் திருக்கோயில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:தஞ்சாவூர்
அமைவு:திருபுவனம்
கோயில் தகவல்கள்
மூலவர்:கம்பகரேசுவரர் (சிவன்)
தாயார்:அறம் வளர்த்த நாயகி (பார்வதி)
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:தென்னிந்திய கட்டிடக்கலை
வரலாறு
அமைத்தவர்:மூன்றாம் குலோத்துங்க சோழன்

திருபுவனம் கம்பகரேஸ்வரர் கோயில் கும்பகோணம் அருகில் திருபுவனம் என்னும் சிற்றூரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும். இது ஒரு தேவார வைப்புத்தலமாகும்.[1]

அமைவிடம்

ராஜகோபுரம்

இக்கோயில் கும்பகோணம் அருகே மயிலாடுதுறை - கும்பகோணம் சாலையில் அமைந்துள்ளது. பெரிய திருச்சுற்றுடன் அமைந்துள்ள இக்கோயிலின் கருவறை சற்று உயர்ந்த தளத்தில் உள்ளது. கருவறையின் வெளியே திருச்சுற்றில் அழகான ஓவியங்களும், சிற்பங்களும் காணப்படுகின்றன. இக்கோயிலின் உள் மண்டபத்தில் அமைந்துள்ள தூண்கள் தாராசுரம் கோயிலில் உள்ளதைப்போன்று வேலைப்பாடுகளுடன் உள்ளன.

தலவரலாறு

பிரகலாதன், திருமால், தேவர்கள், மக்கள் முதலானவர்களுக்கு விளைந்த கம்பத்தினை(நடுக்கத்தை) நீக்கியருளியதால் இத்தல இறைவன் கம்பகரேஸ்வரர் என்ற பெயர் பெற்றார். இக்கோயில் மூன்றாம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்டது.

இறைவன், இறைவி

மூலஸ்தானத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவனின் திருப்பெயர் ஸ்ரீகம்பகரேசுவரர். தமிழில் நடுக்கம் தீர்த்த பெருமான் என்பது பொருள். திருபுவன ஈச்சரமுடையாக தேவர் என்பது இக்கோயில் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டிருக்கும் திருப்பெயராகும். இத்தலத்து அம்பாளுக்கு ஸ்ரீ அறம்வளர்த்த நாயகி என்ற பெயர் வழங்குகின்றது.

சிறப்பு

சரபேஸ்வரர் சன்னதி

இங்குள்ள சரபேஸ்வரர் சன்னதி மிகவும் சிறப்பு பெற்றதாகும். சரபேஸ்வரர் தனிச்சன்னதியில் உள்ளார்.[2] சோழர் காலக் கட்டிடக்கலைக்கு உதாரணமாக இவ்வாலயத்தையும்,தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்தையும், தாராசுரம் ஐராவதீஸ்வரர் ஆலயத்தையும், கங்கை கொண்ட சோழபுரம் ஆலயத்தையுமே குறிப்பிடுகிறார்கள். இக்கோயிலின் விமான அமைப்பு மேற்கண்ட கோயில்களில் உள்ள விமானங்களைப் போலவே அமைந்துள்ளது.

சரபேசுவரர்

இத்தலத்தில் சரபேசுவரர்க்கு தனி சந்நிதி உள்ளது.[3]

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

  1. பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009
  2. தினமலர் கோயில்கள், அருள்மிகு கம்பகரேஸ்வரர் கோயில்
  3. http://temple.dinamalar.com/New.php?id=389 அருள்மிகு கம்பகரேசுவரர் திருக்கோயில்

வெளி இணைப்புகள்

புகைப்படத்தொகுப்பு

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!