அய்யம்பேட்டை (ஆங்கிலம்:Ayyampettai), என்பது இந்தியாவின்தமிழ்நாடுமாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தின் பாபநாசம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். அய்யம்பேட்டை முன்பு இராமச்சந்திரபுரம் என்று அறியப்பட்டது. இங்கு அதிகம் சௌராட்டிர மக்களும், பட்டு சாலியர்களும், இசுலாமியர்களும் வாழ்கிறார்கள். நெசவுத் தொழில் அதிக அளவில் புழக்கத்தில் உள்ளது. இங்கு இரயில் நிலையம் ஒன்றும், பழமையான பள்ளியும் உள்ளன.
அய்யம்பேட்டை பேரூராட்சியில் பிரசன்ன ராஜகோபாலசாமி திருக்கோவிலில் ஆண்டு தோறும் தேரோட்டம் நடைபெற்று வருகிறது. மேலும் ஸ்ரீ சக்கரவாக்கீஸ்வரர் சுவாமி கண்ணாடி பல்லக்கில் ஏழு ஊர் சுற்றி வலம்வரும் சப்தஸ்தான திருவிழாவில் அய்யம்பேட்டை நகரில் பூச்சொரிதல் விழா ஆண்டு தோறும் நடைபெறுகிறது.
அமைவிடம்
அய்யம்பேட்டை பேரூராட்சிக்கு கிழக்கே கும்பகோணம் 24 கிமீ; மேற்கே தஞ்சாவூர் 15 கிமீ தொலைவில் உள்ளது.