ஆற்காடு சாலை (என். எஸ். கிருஷ்ணன் (என். எஸ். கே.) சாலை என்றும் அழைக்கப்படுகிறது) அதாவது, (SH-113) என்பது தமிழ்நாட்டின், சென்னை நகரத்தின் முக்கிய சாலைகளில் ஒன்றாகும். இது 12 கி.மீ. நீளம் உள்ளது. 1940களின் ஆரம்பத்தில் இந்த சாலை நிர்மாணிக்கப்பட்டு, சென்னை நகரத்தின் மேற்குப் புறங்களின் வளர்ச்சிக்கு துணையாக இருந்தது.[1]
சீரமைப்பு
ஆற்காடு சாலையின் 6 கி.மீ. பகுதி சென்னை மாவட்டத்தில் அமைந்துள்ளது. மீதமுள்ள 6 கி.மீ. திருவள்ளூர் மாவட்டத்தின் பூந்தமல்லி வட்டத்தில் அமைந்துள்ளது.