சென்னையின் முதல் பல்திரை வளாகமான சத்யம் திரையரங்குகள் இச்சாலையின் புறத்தே அமைந்துள்ளது.[2] இச்சாலையில் உள்ள சரவண பவன் உணவகம் புகழ் பெற்றதாகும். இந்த உணவகத்தைத் தொட்டு துவங்கும் கான்ரன் இசுமித் சாலையில் டிஏவி கோபாலபுரம் பள்ளி இயங்குகின்றது. இச்சாலையின் இராயப்பேட்டைப் பகுதியில் ஆற்காடு இளவரசரின் அமீர் மகால், புதுக்கல்லூரி ஆகியன அமைந்துள்ளன. இராயப்பேட்டை பொதுமருத்துவமனை இச்சாலையும் இராயப்பேட்டை நெடுஞ்சாலையும் சந்திக்கின்ற சந்திப்பில் உள்ளது.