ஸ்பென்சர் பிளாசா

ஸ்பென்சர் பிளாசா பேரங்காடி
Spencer Plaza

ஸ்பென்சர் பிளாசா பேரங்காடி, சென்னையின் ஒரு முக்கிய அடையாளச் சின்னங்களில் ஒன்று.

Lua error in Module:Mapframe at line 384: attempt to perform arithmetic on local 'lat_d' (a nil value).
பொதுவான தகவல்கள்
வகைபேரங்காடி மற்றும் வணிக அலுவலகங்கள்
கட்டிடக்கலை பாணிநவீனத்துவம்
இடம்அண்ணா சாலை,
சென்னை,
இந்தியா
முகவரி

769, அண்ணா சாலை, சென்னை,
தமிழ் நாடு 600 002, இந்தியா

ஆள்கூற்று
கட்டுமான ஆரம்பம்1863
தொழில்நுட்ப விபரங்கள்
தள எண்ணிக்கைஎட்டு
தளப்பரப்பு1,068,000 sq ft (99,000 m2)
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக்கலைஞர்(கள்)சி.ஆர். நாராயண ராவ் அண்ட் கோ

முதன்மை ஒப்பந்தகாரர்:
தாராபூர் அண்ட் கோ


உருவாக்குநர்:
மங்கள் தீர்த்

ஸ்பென்சர் பிளாசா (ஆங்கிலம்/English : Spencer Plaza) தமிழ் நாடு, சென்னை அண்ணா சாலை மீது அமைந்துள்ள ஒரு பழமையான பல்கடை பேரங்காடி ஆகும். இது 1863 ஆம் ஆண்டு பிரித்தானிய காலத்தில் கட்டப்பட்டு மீண்டும் 1985 ஆம் ஆண்டு மறுகட்டமைக்கப்பட்டது. இது சென்னை நகரத்தின் ஒரு முக்கிய நவீன அடையாளங்களில் ஒன்றாக விளங்குகிறது.

வரலாறு

ஸ்பென்சர் பிளாசா பேரங்காடி 1863–1864 ஆம் ஆண்டு சார்லஸ் டுரண்டு (Charles Durant) மற்றும் ஜே. டபிள்யூ. ஸ்பென்சர் (J. W. Spencer) ஆகிய இருவர் இணைந்து அன்றைய மதராஸ் மாகாணத்தில், மவுண்ட் ரோடு எனப்படும் இன்றைய அண்ணா சாலையில் கட்டப்பட்டது. இதன் உண்மையானக் கட்டமைப்பு பிரித்தானிய காலத்தில் கட்டப்படவையாகும். இது இந்திய பேரங்காடிகளில் மிகவும் பழமையானதாகவும் மற்றும் இது கட்டப்பட்டபோது தென் ஆசியாவில் மிக பெரிய வணிகவளாகங்களில் ஒன்றாகவும் விளங்கியது. 1895 ல் இந்திய துணை கண்டத்தில் முதல் பல்பொருள் அங்காடியாகத் திகழ்ந்தது. மற்றும் இந்த அங்காடியில் கடைகள் மற்றும் வர்த்தக வளாகங்கள் உள்ளடக்கியதாகவும் மக்களுக்கு தேவையான அனைத்துப் பொருட்களும் ஒரே இடத்தில் கிடைத்ததால் மக்களிடையே மிகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. பின்னர் சில ஆண்டுகள் கழித்து ஸ்பென்சரின் உரிமையாளர், அந்த காலத்தில் மிகவும் பிரபலமாக இருந்த இந்தோ - சாராசனிக் பாணியில் ஒரு அழகிய கட்டடம் கட்டப்பட்டது. டபிள்யூ. என். போக்சன் (W. N. Pogson) என்பவர் இந்த கட்டடத்தை வடிவமைத்தார். 1983 ஆம் ஆண்டு இக்கட்டிடத்தில் ஒரு மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டு கட்டிடம் சேதமடைந்தது. மீண்டும் 1985 ஆம் ஆண்டு மறுகட்டமைக்கப்பட்டது. மேலும் இங்கு வரும் தானுந்துகளை (Car) நிறுத்துவதர்காக வாகனம் தரிப்பு வசதி (Parking) மூன்று அடித்தளப் பிரிவுகளாக இவை கட்டப்பட்டுள்ளது. இந்த மொத்தத் தளத்திலும் எண்ணூறு தானூந்துக்களுக்கும் மேல் நிறுத்திக்கொள்ளும் வசதிக் கொண்டது. மற்றும் சென்னையில் வசிக்கும் மக்கள் பொழுது போக்கிற்காக கூட்டமாக வரும் முக்கிய இடங்களில் இதுவும் ஒன்றாகும். மேலும் இந்தியாவின் மிக பெரிய மற்றும் நல்ல வர்த்தக வளாகங்களின் அடிப்படையில் மார்ச் 2010 ஆம் ஆண்டிற்காக, இது 530,000 சதுர அடி கொண்டு ஜ (I) அட்டவணை பகுதியில் நாட்டின் 11 வது மிகப் பெரிய பேரங்காடி என்ற அந்தஸ்தைப் பெற்றது.

கடைகள்

இரண்டாம் கட்ட நுழைவாசல்

இந்த பேரங்காடியின் மேற்கு பக்கத்தில் 20,000 சதுர அடி பரப்பிலான ஒரு பெரிய நங்கூரம் கடை, மற்றும் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான உடைகள், பரிசு பொருள்கள் மற்றும் உணவு கலன்கள் உள்ளது. மற்றும் லெண்ட்மார்க் (40,000 சதுர அடி).

மற்றும் பல்வேறு உள்ளூர் மற்றும் சர்வதேச தரவகைகள்: நைக், அடிடாஸ், பாட்டா, ரீகல், உடல்நலம் அண்ட் பொலிவு, வியும்மிடியர்ஸ், வான் கியுசன், ப்ரோலின், ஆலன் சோலி, ஃபேலோர்சாஜம் காலணிகள், லூயிஸ் பிலிப், டைட்டன் கடிகாரம், லெவிஸ், கேசியோ, வி.ஜ.பி. பயணப்பெட்டிகள், ஸ்பென்சர் அண்ட் கோ (தரையில் 40,000 சதுர அடி, முதல் மற்றும் இரண்டாவது மாடிகள்).

26,000 சதுர அடி பரப்பலவில் டைம்க்ஸ் கடிகாரம் காட்சியறை, ஸ்வாட்ச்,
குக்கீ மென் கணினி மற்றும் இணையம் மையம், கலர் பிளஸ்,
நைவிகாடுர், விட்கோ, பாண்டலூன்ஸ்.

இரண்டாவது மற்றும் மூன்றாவது பிரிவுகளில் 65,000 சதுர அடியில்
அரோவ், லீ , இசை உலகம், உணவு உலகம், எச்எஸ்பிசி (HSBC),
ஏபிஎன் அம்ரோ, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் பணம் மாற்றம், சிட்டி வங்கி.

மற்றும் டு பவுல் மையம் (Du Bowl). 16,000 சதுர அடி).
இத்துடன் வன் துணியாடைகள் (Jeans), நீல்கிரீஸ் சிறப்பங்காடி (சூப்பர் மார்கெட்).
மேலும் பிப்ரவரி 26 , 2004 அன்று, இலங்கை ஏற்றுமதி வளர்ச்சிக் குழு 17 மில்லியன் செலவில் சிக்கலான ஒரு வர்த்தக மையம் நிறுவப்பட்டது. இலங்கை வர்த்தக மையக் கட்டிடம் மூன்றாம் கட்ட முதல் மாடியில் 20,000 சதுர அடி மேல் பரப்பலவைக் கொண்டு, பதினேழு முன்னணி இலங்கை நிறுவனங்கள் ஆடை காணப்படுகின்றது, மற்றும் செயற்கை பூக்கள், இனிப்புத் தின்பண்டங்கள், காலணிகள் மற்றும் தோல் பொருட்கள், ஆபரணங்கள் மற்றும் மதிப்புமிக்க கல், மூலிகை பொருட்கள், ஒளி பொறியியல் பொருட்கள், கைத்தொழில் பீங்கான், மேசைக்கலன்கள், இலங்கை தேயிலை, பொம்மைகள், மற்றும் போக்குவரத்து மற்றும் வானூர்திகளின் பயணச்சீட்டுகள் (Tickets) இவை அனைத்தும் உள்ளடங்கும்.

வெளி இணைப்பு

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!