கட்டுமானத்துறையில்அடித்தளம் என்பது, கட்டிடம் அல்லது ஒரு அமைப்பின் சுமையை நிலத்துக்குக் கடத்துவதற்கான ஒரு அமைப்புக் கூறு ஆகும். இவை பொதுவாக நிலத்தின் கீழேயே அமைகின்றன. இதனால் இவை கட்டிடங்களின் நிலக்கீழ் அமைப்பின் ஒரு பகுதியாகக் கொள்ளப்படுகின்றன.[1][2][3]
அடித்தளமானது கட்டடத்தின் ஒரு முக்கியம் வாய்ந்த பகுதியாக இருக்கிறது. இது நிலத்துடன் நேரடித்தொடர்பை வைத்திருக்கிறது.
அடித்தள வடிவமைப்பு
அடித்தளங்களின் வடிவமைப்பானது, கட்டிடம் அல்லது அமைப்பின் உயரம், அதன்மீது சுமத்தப்படவுள்ள நிறை உட்பட அதன் நிறை, மண்ணின் தாங்குதிறன், மண்வகை, நிலக்கீழ் நீர்மட்டம் போன்ற பல விடயங்களில் தங்கியுள்ளது.
அடித்தள வகைகள்
அடித்தளங்கள், கட்டுமானம் மற்றும் மண்ணின் இயல்புகளைப் பொறுத்து இரு விதமாக உள்ளன.
மேலோட்ட அடித்தளம்
மேலோட்ட அடித்தளம், பொதுவாக மண்ணில் சில மீட்டர்கள் வரை புகும்படி அல்லது பற்றி உட்பொதிக்கப்பட்ட வகையில் அமைக்கப்படும். சிறிய மட்டும் நடுத்தர உயர கட்டடங்களில் பொதுவாக இந்த வகை அடித்தளங்கள் அமைக்கப்படும்.
ஆழ்ந்த அடித்தளம்
ஆழ்ந்த அடித்தளம் என்பது ஓர் கட்டிட அமைப்பில் இருந்து, மண்ணில் உயர் பகுதியில் உள்ள பலவீனமான படலத்திலிருந்து மண்ணின் கீழே உள்ள ஒரு உறுதியான ஆழ்ந்த படலத்திற்கு பளு அல்லது சுமையை மாற்றப் பயன்படுகின்றது. வானளாவி போன்ற உயரமான கட்டடங்களில் இவ்வகை அடித்தளங்கள் பயன்படுத்தப்படும்.