சர்தார் பட்டேல் சாலை, சென்னை
சர்தார் பட்டேல் சாலையிலுள்ள மேம்பாலம்
சர்தார் பட்டேல் சாலை சென்னையின் அடையாறுக்கும் கிண்டி வழியாக அண்ணா சாலைக்கும் இடையே உள்ள முதன்மைச் சாலையாகும். கிழக்கு மேற்காக செல்லும் இச்சாலையின் நீளம் 3.2-கிலோமீட்டர் (2.0 mi) ஆகும். கிழக்கு முனையில் இது வடக்குப்புறமாகத் திரும்பி அடையாறு ஆற்றைக் கடந்து இராசா அண்ணாமலைபுரத்தை எட்டுகின்றது.
மேற்கில் கிண்டி தொடருந்து நிலையத்திற்கும் சின்னமலை சந்திப்பிற்கும் இடையேயான அசோக் லேலண்ட் நிறுவனத் தலைமையகச் சந்திப்பில் அலெக்சாண்டர் சதுக்கமருகே துவங்குகின்றது. இச்சாலையில் ஆளுநர் வசிக்கும் இராசபவன் அமைந்துள்ளது. தவிரவும் முதன்மை கல்விக்கூடங்களான இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை , அண்ணா பல்கலைக்கழகம் போன்றவையும் இச்சாலையில் உள்ளன. கிண்டி தேசியப் பூங்கா , கிண்டி பாம்புப் பூங்கா, காந்தி மண்டபம், புற்றுநோய் ஆய்வுக்கழகம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் , மத்திய கைலாசு கோவில் ஆகியன இச்சாலையில் அமைந்துள்ளன. மத்திய கைலாசத்துச் சந்திப்பில் ராஜீவ் காந்தி சாலை துவங்குகின்றது. இந்தச் சந்திப்பில் சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையேயான பறக்கும் தொடருந்துத் தடத்தின் கசுத்தூரிபாய் நகர் தொடருந்து நிலையம் அமைந்துள்ளது.
தற்போது 24 மீ அகலமுள்ள இச்சாலையை 30.5மீ அகலமுள்ளதாக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டு 2014இல் பணியைத் தொடங்கியது.[ 1]
மேற்சான்றுகள்
சென்னை தொடர்புடைய சாலைகள்
அண்ணா சாலை , அரண்மனைக்காரன் தெரு , ஆற்காடு சாலை , இரங்கநாதன் தெரு , எல்லீஸ் சாலை , கல்லூரிச் சாலை , கோயம்பேடு சந்திப்பு , சர்தார் பட்டேல் சாலை , செயிண்ட் மேரீஸ் சாலை , சென்னை உயர்மட்ட விரைவுச்சாலைகள் , கத்திப்பாரா சந்திப்பு , கிழக்குக் கடற்கரைச் சாலை , சென்னை புறவழிச்சாலை , சென்னைத் துறைமுகம் – மதுரவாயல் விரைவுச்சாலை , செனடாப் சாலை , தங்கசாலை தெரு , திரு. வி. க. சாலை , நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை , பாடி சந்திப்பு , பாரதி சாலை , பிராட்வே , பீட்டர்ஸ் ரோடு , மத்திய சதுக்கம் , மாநில நெடுஞ்சாலை 2 , மாநில நெடுஞ்சாலை 49 , தேசிய நெடுஞ்சாலை 45 , ராஜீவ் காந்தி சாலை , பூந்தமல்லி நெடுஞ்சாலை , வாலாஜா சாலை , வண்டலூர்-மீஞ்சூர் வெளி வட்டச் சாலை