கல்லூரிச் சாலை

கல்லூரிச் சாலையின் பெயர்ப்பலகை

கல்லூரிச்சாலை (College Road) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத் தலைநகரான சென்னையின் நுங்கம்பாக்கம் என்ற இடத்தில் அமைந்துள்ள குறிப்பிடத்தக்க சாலையாகும். இச்சாலையில் பல முதனிலைக் கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், வங்கிகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்கள் ஆகியன இயங்கி வருகின்றன.

அமைப்பு

இச்சாலை கிழக்கு மேற்காக சுமார் 1.3 கி.மீ. நீளத்தில் அமைந்துள்ளது. மேற்கே ஸ்டெர்லிங் சாலையின் முடிவிலிருந்து தொடங்கி கிழக்கே கிரீம்சு சாலையும் பாந்தியன் சாலையும் சந்திக்கும் இடத்தில் கூவம் ஆற்றங்கரையின் அருகே முடிவடைகிறது.[1]

சிறப்பிடங்கள்

இச்சாலையில்

  • மகளிர் கிறித்துவக் கல்லூரி
  • பேரா. அன்பழகன் கல்வி வளாகம்
  • சங்கர நேத்ராலயா மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம்
  • யூனியன் பாங்க் ஆப் இந்தியா
  • இந்தியன் ஓவர்சீசு வங்கி
  • எச்டிஎஃப்சி வங்கி
  • ஸ்டே்ட் பாங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட முதன்மையான நிறுவனங்கள் அமைந்துள்ளன.[2][3]

கல்லூரிச்சாலையில் உள்ள முக்கிய இடங்களின் ஒளிப்படத்தொகுப்பு

ஈவிகே சம்பத் மாளிகை
பாரத ஸ்டேட் வங்கியின் சென்னை பகுதி அலுவலகம்
பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தின் முகப்பு நுழைவாயில்
பள்ளிக் கல்வித்துறை நுழைவாயில்
சங்கர நேத்ராலயா மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம்
மகளிர் கிறித்துவக் கல்லூரி

மேற்கோள்கள்

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!