பகவத் கீதையின் முதல் அத்தியாயம், 36வது சுலோகத்தில், மகாலட்சுமியின் கணவரான மாதவனே என விளித்து, போர்க் களத்தில் எதிரில் நிற்கும் நம் உறவினர்களையும், குருமார்களையும் கொல்வதால் என்ன பயன்? என விஷ்ணுவின் அவதாரமான கிருஷ்ணரை நோக்கி அருச்சுனன் கேட்கிறான். (Bhagavad-Gita 1.36)
பெயர்க் காரணம்
அனைத்து நிதிகளின் அதிபதி என்பதாலும், மது எனும் அரக்கனை கொன்றதாலும் விஷ்ணுவிற்கு மாதவன் எனப் பெயராயிற்று.[1]
மாதவன் என்பதற்கு மகாலட்சுமியை மணந்தவர் என்றும், மது வித்தையின் மூலம் அறியத் தக்கவன் எனவும், ஆதிசங்கரர் தனது விஷ்ணு சஹஸ்ரநாமத்திற்கான விளக்க உரையில் குறிப்பிட்டுள்ளார்.
பண்டைக் காலம் முதல் ஒடிசாவில் மாதவனுக்கு நீல-மாதவன், இராதா-மாதவன், துர்கா-மாதவன் போன்ற பெயர்களில் வழிபாடுகள் இருந்து வருகிறது.
↑Maharishi Mahesh Yogi on the Bhagavad-Gita, a New Translation and Commentary, Chapter 1-6. Penguin Books, 1969, p 37 (v 14)
Cited from Sri Vishnu Sahasranama, commentary by Sri Sankaracharya, translated by Swami Tapasyananda, available at Sri Ramakrishna Math, Chennai. [1]பரணிடப்பட்டது 1999-04-17 at the வந்தவழி இயந்திரம்[2]