அவதாரம் என்பது தர்மக் கோட்பாட்டு சமயங்களான இந்துசமயத்திலும்அய்யாவழியிலும் குறிப்பிடப்படும் ஒரு கோட்பாடு ஆகும். இரு சமயங்களிலும் பொதுவாக திருமாலே அவதாரக்கடவுளாக கருதப்படுகிறார். மனிதன் மற்றும் அனைத்து சீவராசிகளும் பூமியில் கர்ம வினை காரணமாக பிறப்பெடுக்கிறது. ஆனால் இறைவன் எவ்வித கர்ம வினையின்றி அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டவே பூமியில் அவதாரம் எடுக்கிறார். இவ்விடம் அவதாரம் எனபதற்கு இறங்கி வருதல் என்று பொருள்.
சைவ சமயக்கடவுளான சிவபெருமான் அவதாரங்களை எடுப்பதில்லை என்ற நம்பிக்கை நிலவினாலும், சிவபெருமான் இருபத்து எட்டு அவதாரங்களை எடுத்ததாக மகாபுராணங்களில் ஒன்றான கூர்ம புராணம் கூறுகிறது.[3]
தேவர்கள் மட்டுமல்ல அசுரர்களும் மானிட வடிவில் பூமியில் மீண்டும் பிறந்ததாக மகாபாரதம் கூறுகிறது. அதோடு சில மகாபாரத கதைமாந்தர்களில் முற்பிறவியை பற்றி சில புராணங்களில் கூறப்பட்டுள்ளன.
கிராதன் என்பவன் மகாபாரதத்தில் அபிமன்யுவிடன் போரிட்டவர்களின் ஒருவன்; இவன் ராகுவின் அவதாரமாவான்.