புவனேசுவரி இந்து சமய நம்பிக்கைகளில் [[|]]மகாவித்யா சக்தியின் பத்து அம்சங்களில் நான்காவது சொரூபமாக விளங்குகின்றாள். பௌதீக உலகின் தோற்றத்திற்கு காரணமான மகா சக்தியாக வர்ணிக்கப்படுகின்றாள். மேலும், உலகின் தீயவற்றை அழிப்பவளாகவும், நல்லவற்றை உருவாக்குபவளாகவும் போற்றப்படுகின்றாள். இவளே சரஸ்வதி, இலக்குமி, காளி மற்றும் காயத்ரி முதலான தெய்வங்களின் தாய்த் தெய்வம் என்பர். புராணக்கதைகளும் இந்து மத ஐதீககங்களும் இவளை சக்தி வாய்ந்த பெரும் தெய்வமாக வர்ணிக்கின்றன. நவக்கிரங்கள் மற்றும் மும்மூர்த்திகள் ஆகியவர்களாலும் தடுக்க முடியாத அதிசக்தி வாய்ந்தவராக இவர் கருதப்படுகிறார்.