இவரது மகனான கம்சனால் சிறையில் அடைக்கப்பட்டார் மன்னர் உக்கிரசேனர். பின்னர் கம்சனை கொன்று கிருட்டிணன் உக்கிரசேனரை சிறை மீட்டு மீண்டும் அரியணையில் அமர்த்தினார். சூரசேனரின் மகனும், கிருஷ்ணரின் தந்தையும், மன்னர் உக்கிரசேனரின் மருமகனுமான வசுதேவருக்கு பட்டத்து இளவரசு பட்டம் வழங்கப்பட்டது.
முடிவு
குருச்சேத்திரப் போருக்குப் பின்னர் துவாரகையில் கிருஷ்ணரின் மூத்த மகன் சாம்பனுக்கு, முனிவர்கள் அளித்த சாபத்தின் விளைவால், பெரும்பாலான யது குல ஆண்கள் மதுவின் மயக்கத்தால் ஒருவரை ஒருவர் ஆயுதங்களால் தாக்கிக் கொண்டு இறந்தனர். இந்நிகழ்வுக்குப் பின்னர் கிருஷ்ணர் வேடுவனின் அம்பால் தவறாகக் கொல்லப்பட்ட செய்தி அறிந்த உக்கிரசேனர் மனவேதனையுடன் உயிர் நீத்தார்.[3]