யது குல கிருஷ்ணர் பிறந்த நாளை கிருஷ்ண ஜெயந்தி எனும் பெயரில் இந்து சமய மக்களால் ஆண்டு தோறும் கொண்டாடப்படுகிறது. கிருஷ்ணர் பிறந்த சிறையின் அறை, கிருஷ்ணர் கோயிலின் கர்ப்பகிரகமாக அமைந்துள்ளது. [3][4]
பிற்காலத்தில் கிருஷ்ண ஜென்ம பூமியில் கிருஷ்ணருக்கு கோயில் கட்டப்பட்டது. 17-ஆம் நூற்றாண்டில், முகலாயர் ஆட்சியின் போது, பேரரசர் அவுரங்கசீப்பின் ஆணையின் பேரில் , இக்கோயில் முழுவதும் இடிக்கப்பட்டு, 1662-ஆம் ஆண்டில்- மதுரா சாகி ஈத்கா மசூதி கட்டப்பட்டது. பின்னர் இந்த மசூதியின் சுவர் பக்கத்தில் இருந்த கிருஷ்ணர் பிறந்த சிறைச்சாலையின் ஒரு பக்கத்தில் புதிய கேசவ தேவ் கோயில் கட்டப்பட்டு, கிருஷ்ணருக்கு அர்ப்பணிக்கப்பட்டது.