முட்டி உடைத்தல்

உறியடி அல்லது முட்டி உடைக்கும் நிகழ்வு

முட்டி உடைத்தல் அல்லது உறியடி என்பது ஒரு தமிழர் விளையாட்டு ஆகும். பொங்கல் பண்டிகை மற்றும் கிருஷ்ண ஜெயந்தி போன்ற விழாக் காலங்களில் உறியடி ஆட்டத்தை கிராமங்களில் காண இயலும்[1]. இரண்டு கம்புகளுக்கிடைய ஒரு குறிப்பிட்ட உயரத்தில் முட்டி ஒன்றை (மண்பானையை) மஞ்சள் கலந்த நீரால் ஊற்றி, மரத்தில் அல்லது தடியில் கயிறுகளால் உயரக் கட்டுவார்கள். உடைக்க முனைபவரின் கண்கள் கட்டுப்பட்டு, திசையை குழப்பி விடுவர். முட்டியை உடைக்க ஒரு நீளமான மூங்கில் கம்பினைக் கொடுப்பார்கள். கண்களை கட்டியிருக்கும் நபர் உணர்ந்து சரியாக முட்டியை உடைத்தால் அவர் வெற்றி பெற்றவராவார்.

மேற்கோள்கள்

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!