பரிசித்து ஒரு சமயம் காட்டில் வேட்டையாடிக் கொண்டிருந்தபோது, சமீகர் என்ற முனிவரின் குடிசையினுள் நுழைந்தான். பலமுறை அவரை வணங்கியும் தியானத்திலிருந்த அவரின் கவனத்தை தன் மீது திருப்ப இயலவில்லை. இதனால் வெறுப்புற்ற மன்னர் பரிசித்து, செத்த பாம்பை சமீக முனிவரின் கழுத்தில் போட்டுவிட்டு சென்றான். சற்று நேரம் கழித்து வந்த முனிவரின் மகன் சிரிங்கி, மன்னர் பரீசித்திற்கு, ஏழு நாளில் பாம்பு கடிபட்டு இறப்பான் என சாபம் இடுகிறான்.
முனி குமாரனின் சாபத்தை அறிந்த மன்னர் பரிசித்து[1] தனது மகன் ஜனமேஜயனை அத்தினாபுரத்தின் அரியணையில் அமர்த்தி, நாடு துறந்து தன் வாழ்வின் கடைசி ஏழு நாட்களில் சுக முனிவரிடம்பாகவதக் கதையை கேட்டறிகிறான். சாபத்தின்படியே பாம்பரசன் தட்சகன் பரிட்சித்தை ஏழாம் நாளில் கடிக்க, பரிசித்து மேலுலகம் செல்கிறான்.[2]
இவ்வரலாற்றை பின்னர் கேள்வியுற்ற ஜனமேஜயன் துயரமடைந்து[3], அனைத்து பாம்புகளையும் அதே ஏழு நாட்களில் கொல்ல, உத்தங்கரின் தூண்டுதலால் நாக வேள்வியை மேற்கொள்கிறார். தட்சகன் சகோதரியின் மகனான ஆஸ்திகர் ஜனமேஜயனின் வெறித்தனமான பாம்பு வேள்வியை தடுக்கிறார். அதனால் தட்சகன் காப்பாற்றப்படுகிறான்.