அகிலாவதி மகாபாரதக் காதாபாத்திரங்களில் ஒருவராவார். இவள் ஒரு நாக கன்னிகை. பீமனின் மகனான கடோற்கஜனைத் திருமணம் செய்தாள். அகிலாவதி கேட்ட அனைத்துக் கேள்விகளுக்குப் பதிலளித்தே அவளைக் கடோற்கஜன் மணம் புரிந்தான்.[1]
அகிலாவதியின் மகனே பார்பரிகா. பார்பரிகாவுக்கு இவள் தோற்கும் பக்கத்துடன் சேர்ந்து போரிடப் பழக்கினாள். பார்பரிகா பாரதப்போரின் பதினான்காம் நாளில் கௌரவருடன் இணைந்து போரிடத் தொடங்கி பீமன், காடோற்கஜன், அருச்சுனன் ஆகியோரையும் வென்றான். கிருஷ்ணனால் கொல்லப்பட்டான்.
மேற்கோள்கள்