வல்லபன்

வல்லபன், மகாபாரத இதிகாசத்தில் 12 ஆண்டுகள் வன வாசத்தை முடித்த பாண்டவர்கள், ஓராண்டு தலைமறைவு வாழ்க்கை நடத்த திரௌபதியுடன் மத்சய நாட்டின் மன்னர் விராடனின் அரண்மனையில் மாறு வேடத்தில் பணியில் சேர்ந்தனர். வீமன் விராட அரண்மனை சமையல் பணியாளாரக வல்லபன் எனும் பெயரில் பணியில் சேர்ந்தார். [1] [2]

திரௌபதி & மற்ற பாண்டவர்களின் மாறுவேடப் பெயர்கள்

தருமர் அந்தணர் வடிவத்தில் கங்கன் எனும் பெயரிலும், திரௌபதி விராட இராணி சுதோஷ்ணையின் கூந்தல் அலங்காரம் செய்ய சைரந்திரி எனும் பெயரிலும், அருச்சுனன் விராட இளவரசி உத்தரைக்கு நாட்டியம் கற்றுத் தர பிருகன்னளை எனும் பெயரிலும், நகுலன் அரண்மனைக் குதிரைகளுக்கு பயிற்சி தரும் பணியில் கிரந்திகன் எனும் பெயரிலும், சகாதேவன் விராட நாட்டின் ஆநிரைகளை பராமரிக்கும் தந்திரிபாலன் எனும் பெயரிலும் விராட அரண்மனையில் பணியில் சேர்ந்தனர்.

கீசக வதம்

விராட நாட்டு பட்டத்து இராணி சுதோஷ்ணையின் தம்பியும், விராட நாட்டின் தலைமைப் படைத் தலைவருமான கீசகன், விராட இராணி சுதோஷ்ணையின் பணிப்பெண்னான சைரந்திரியைக் கண்டு, அவளை அடைய ஆவல் கொண்டான். கீசகனின் காம வெறியை நிறைவேற்ற இராணி சுதோஷ்ணை, சைரந்திரியை இரவில் மதுக் கோப்பையுடன் கீசகனின் அரண்மனைக்குச் செல்லுமாறு பணித்தாள்.

இச்செய்தியை சைரந்திரி மூலம் அறிந்த வல்லபவன், பெண் வேடமிட்டுக் கொண்டு கீசகனின் அரண்மனைக் கட்டிலில் படுத்துக் கொண்டான்.

அரண்மனைக் கட்டிலில் படுத்திருப்பது சைரந்திரி என நினைத்து கீசகன் ஆவலுடன் கட்டிலில் படுத்திருந்த வல்லபனை கட்டித் தழுவும் போது, வல்லபன் கீசகனின் கை, கால்களை முறித்துக் கொன்றான்.

திரிகர்த்தர்களை விரட்டியடித்தல்

துரியோதனனின் தூண்டுதல் பேரில் விராட நாட்டின் மீது படையெடுத்து வந்த திரிகர்த்தர்களுடன் போரிட கங்கன் வல்லாளனை அனுப்பினார். வல்லாளனும் திரிகர்த்தர்களை தனது சமையலறைக் கரண்டிகளைக் கொண்டு அடித்து விரட்டி, விராட நாட்டை எதிரிகளிடமிருந்து காத்தார்.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!