இவரது மகளான உத்தரையை, அபிமன்யு திருமணம் செய்து கொண்டவர். சுதேஷ்ணையின் மகன்கள் உத்தரன், சுவேதன், சதானீகன் மற்றும் சங்கன் ஆவார். சுதேஷ்ணையின் உடன்பிறந்தவர் கீசகன் ஆவார். [1]சுதேஷ்ணையின் மகள் வழி பேரன் பரீட்சித்து ஆவார்.
வரலாறு
துரியோதனனிடம்பாண்டவர்கள் சூதாட்டத்தில் தோற்றதால், 12 ஆண்டுகள் வனவாசமும், ஒராண்டு தலைமறைவு வாழ்க்கை மேற்கொள்ள வேண்டியதாயிற்று.
12 ஆண்டு வனவாசம் முடித்த பாண்டவர்கள், ஓராண்டு தலைமறைவு வாழ்க்கை வாழ, மாறுவேடத்தில் விராட நாட்டின் அரண்மனையில் பணியாற்றினர்.
திரௌபதி, சைரந்திரி எனும் பெயரில் சுதேஷ்ணைக்கு சிகை அலங்காரம் செய்யும் சிறப்பு பணிப்பெண்னாக பணியாற்றியவர்.[2][3][4] சுதேஷ்ணையின் உடன்பிறப்பான கீசகன், திரௌபதியை தகாத செயலுக்காக அடைய முயற்சி செய்தான். இதை அறிந்த பீமன் எனும் வல்லபன் கீசகனைக் கொன்றான்.[5]