நாகாஸ்திரம் இதிகாசங்களான மகாபாரதத்திலும், இராமாயணத்திலும் குறிப்பிடப்படும் ஆயுதமாகும். மகாபாரதத்தில் கர்ணனின் ஆயுதமாக குறிப்பிடப்படுகிறது. இதை அர்ஜூனனை நோக்கி ஒரு முறை மட்டுமே பிரயோகப் படுத்த வேண்டுமென, கர்ணனிடம் குந்தி தேவி வரம் வாங்குகிறார். கர்ணன் அர்ஜூனனின் மீது நாகாஸ்திரத்தினை ஏவிவிடும் தருணத்தில், அர்ஜூனனைக் கண்ணன் காப்பாற்றிவிடுகிறார் என மகாபாரதத்தில் குறிப்பு காணப்படுகிறது.
திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் கர்ணன் சிற்பம் உள்ளது. தூணில் செதுக்கப்பட்ட இச்சிற்பம் பதினோராம் நூற்றாண்டினைச் சேர்ந்ததாகும். இச்சிற்பத்தில் அர்ஜூனன் மீது கர்ணன் நாகாஸ்திரத்தை ஏவ தயாராகும் நிலையில் உள்ளார். இடது கையில் வில்லும் வலது கையில் நாகாஸ்திரமும் ஏந்தியவாறு சிலை அமைக்கப்பட்டுள்ளது.