பஜ கோவிந்தம்

பஜ கோவிந்தம் (Bhaja Govindam) என்பது சமசுகிருத மொழியில் ஆதி சங்கரரால் இயற்றப்பட்ட பொ.ஊ. எட்டாம் நூற்றாண்டு[1] பக்திப்பாடலாகும். இது ஆதிசங்கரரின் அத்வைதக் கொள்கையின் விழுமியமாய்க் கருதப்படுகிறது.[2] இப்பாடல் ஸ்மர்த்தப் பிராமணர்கள் மட்டுமின்றி வைணவர்களிடையேயும் புகழ் பெற்றதாகும்.

பாடல் எழுந்த சூழல்

ஒரு முறை ஆதிசங்கரர் தனது சீடர் குழாத்துடன் வாரணாசித் தெருக்களில் சென்று கொண்டிருந்தாராம். அப்போது முதிர்ந்த குரு ஒருவர் தனது மாணவர்களுக்கு சமசுகிருத இலக்கணத்தைக் கற்பித்துக் கொண்டிருந்தாராம். இதைக் கண்ட சங்கரமுனி அவர் மீது இரங்கி முதிர்ந்த வயதில் இலக்கணம் கற்பிப்பதில் காலத்தை வீணாக்காமல் கடவுளைப் புகழ்வதிலும் அவரைக் கண்டடைவதிலும் செலவழிக்க வேண்டும் எனும் பொருள் அமைய 'பஜ கோவிந்தம் (கோவிந்தனைப் பாடுவோம்)' எனப் பாடினாராம்.[3] இப்பாடல் இருபத்தேழு வரிகளை உள்ளடக்கியது. உண்மையில் பதின்மூன்று வரிகள் மட்டுமே சங்கரரால் பாடப்பட்டவை என்றும் இதர பதினான்கு வரிகள் அவரோடு அங்கிருந்த ஈரேழு சீடர் ஒவ்வொருவரும் பாடியதாய்ச் சொல்லப்படுகின்றது.

மேற்கோள்கள்

  1. Review பரணிடப்பட்டது 2009-02-06 at the வந்தவழி இயந்திரம் Yogalife, sivananda.org, 2003.
  2. Swami Chinmayananda, Adi Sankaracharya's Bhaja Govindam. Central Chinmaya Mission Trust, 2005.பன்னாட்டுத் தரப்புத்தக எண் 817597107X.
  3. The Hymns of Sankara, by Śankaracarya, Telliyavaram Mahadevan Ponnambalam Mahadevan, Totakācārya, Sureśvarācārya. Published by Motilal Banarsidass Publ., 2002. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8120800974. Page 33.

மேலும் படிக்க

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!