கோவர்தனன் பூஜை (Goverdhan puja), என்றழைக்கப்படும் அன்னகூடம் (Annakut or Annakoot) (உணவு மலை) [1][2][3][4]பாகவத புராணத்தின் படி, தன்னை வழக்கமாக வணங்கும் யாதவர்கள், கிருஷ்ணனின் பேச்சைக் கேட்டு பிருந்தாவனத்தின் கோவர்தன குன்றை பூஜை செய்த காரணத்தினால், கோபம் கொண்ட இந்திரன் பெய்வித்த பெருமழையாலும், சூறாவளிக் காற்றாலும், பிருந்தாவன இடையர்களையும், பசுக்கூட்டத்தையும் கிருஷ்ணன், கோவர்தன மலையை குடையாகப் பிடித்துக் காத்தார்.
ஆயர்களையும், ஆவினங்களையும் காத்த கிருஷ்ணனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, யது குலத்தோர் பலவகை உணவுகளால் பெரிய அளவில் கிருஷ்ணனுக்கு விருந்து படைத்தனர். [5]
இந்நிகழ்வை நினைவு கூரும் வகையில் தற்போதும் தீபாவளி திருநாளுக்கு அடுத்த நாளில், ஆண்டு தோறும் கோவர்தன பூஜை வட இந்திய மாநிலங்களில், குறிப்பாக பஞ்சாப், அரியானா, உத்தரப் பிரதேசம் மற்றும் பிகார் மாநிலங்களில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. [6]