விஷ்ணு புராணம்: இலக்குமணையை "சாருகாசினி" என்றழைப்பதுடன், அவளை எண்மனையாட்டியரில் ஒருத்தியாகக் குறிப்பிடும் போதும், "மாத்திரி" என்ற பெயரில், இன்னொருத்தியையும் சொல்கின்றது.[4]
பாகவத புராணம்: மத்திர நாட்டின் பெயர் தெரியா மன்னன் ஒருவனின் மகளாகவும், நற்குணங்கள் வாய்ந்தவளாகவும் இலக்குமணையை இனங்காட்டுகின்றது.[5]
பத்ம புராணம்: மத்திரநாட்டு மன்னனை, "பிருகத்சேனன்"' என்று அடையாளம் காட்டுகின்றது.[6]
அரி வம்சம்: இதுவும் அவளை "சாருகாசினி என்கின்றது. எனினும் விஷ்ணு புராணம் போலவே, மத்திரநாட்டுடன் இணைக்கவில்லை. "சுபீமை" எனும் பெயருடன் வேறொருத்தியை "மாத்திரி" என்ற பெயரில் எண்மனையாட்டியரில் ஒருத்தியாகக் குறிப்பிடுகின்றது.[7]
இலக்குமணைக்கு, அவள் தந்தை வைத்த மணத்தன்னேற்பில் கண்ணன் அவளைக் கவர்ந்துகொண்டதாக, பாகவத புராணம் விவரிக்கின்றது.[3][8] இன்னொரு கதையில், ஜராசந்தன், துரியோதனன் ஆகியோரே தவறவிட்ட விற்போட்டியொன்றில் வென்று, அவளைக் கண்ணன் மாலையிட்டதாகச் சொல்லப்படுகின்றது.அப்போட்டியில் அருச்சுனன் பங்குபற்றி, வேண்டுமென்றே தோற்றுப்போனதாகவும் பீமன் போட்டியில் கலந்துகொள்ளாது தவிர்த்ததாகவும் அக்கதை நீள்கின்றது.[9]
கண்னனும் அவனது எண்மனையாட்டியரும் ஒருமுறை அத்தினாபுரம் சென்றபோது,. நாணமும் கம்பீரமும் நிறைந்த இலக்குமணை, தன்னைக் கண்ணன் மணந்த வரலாற்றை திரௌபதியிடம் விவரிக்கின்றாள்.[2]
பிற்கால வாழ்க்கை
பாகவத புராணத்தின் படி, பிரகோசன், கத்திரவான், சிங்கன், பலன், பிரபலன், ஊர்த்துவகன், மகாசக்தி. சகன், ஓயன், அபராயிதன் என்று அவளுக்கு பத்துக் குழந்தைகள்.[10] விஷ்ணு புராணம், அவளுக்கு கத்திரவான் முதலான பல மைந்தர் இருந்ததைச் சுட்டிக் காட்டுகின்றது.[4] கண்ணனின் மறைவுக்குப் பின், அவனது ஏனைய தேவியர் போலவே இவளும் உடன்கட்டையேறித் தன்னுயிரை மாய்த்துக் கொண்டாள்.[11][12]
↑Aparna Chatterjee (December 10, 2007). "The Ashta-Bharyas". American Chronicle. Archived from the original on 6 டிசம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 21 April 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help)