நந்தகோன், மதுரா மாவட்டம்

நந்தகோன்
நந்தீஸ்வரர் மலை
நகரம்
நந்தகோன் is located in உத்தரப் பிரதேசம்
நந்தகோன்
நந்தகோன்
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் மதுரா மாவட்டத்தில் அமைவிடம்
நந்தகோன் is located in இந்தியா
நந்தகோன்
நந்தகோன்
நந்தகோன் (இந்தியா)
ஆள்கூறுகள்: 27°43′N 77°23′E / 27.72°N 77.38°E / 27.72; 77.38
நாடு இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
மாவட்டம்மதுரா
பெயர்ச்சூட்டுநந்தகோபன்
அரசு
 • வகைபேரூராட்சி
ஏற்றம்
184 m (604 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்11,517
மொழிகள்
 • அலுவல் மொழிஇந்தி
 • வட்டார மொழிவிரஜ மொழி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
281403
வாகனப் பதிவுUP 85
இணையதளம்up.gov.in

நந்தகோன் (Nandgaon), இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் மதுரா மாவட்டத்தில் சாட்டா வருவாய் வட்டத்தில் அமைந்த பேரூராட்சி ஆகும். நந்தகோன் பகுதியில் நந்தீஸ்வரர் மலைக் குன்றுகள் உள்ளது. இவ்வூரில் விரஜ மொழி பேசப்படுகிறது. யாதவர்களின் பூர்வீக பிரதேசமான விரஜபூமியின் முக்கிய நகரங்களில் நந்தகோனும் ஒன்றாகும். மற்றவைகள் மதுரா, பிருந்தாவனம், கோகுலம் மற்றும் பர்சானா ஆகும். கிருஷ்ணரின் வளர்ப்புத் தந்தையான நந்தகோபன் பெயரால் இதற்கு நந்தகோன் எனும் பெயராயிற்று. இப்பகுதியி

அமைவிடம்

நந்தகோன் பேரூராட்சியானது, மதுரா நகரத்திற்கு வடமேற்கே 55 கிலோ மீட்டர் தொலைவிலும், பிருந்தாவனத்திலிருந்து 48 கிலோ மீட்டர் தொலைவிலும், ராதை வாழ்ந்த பர்சானாவிலிருந்து 8 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.

தொன்ம வரலாறு

பாகவத புராணத்தில், வசுதேவர்-தேவகி தம்பதியருக்கு, கம்சனின் சிறையில் பிறந்த குழந்தை கிருஷ்ணரை வளர்க்க, யமுனை ஆற்றின் அக்கரையில் வாழும் தனது நண்பர் நந்தகோபனிடம் ஒப்படைத்தார். நந்தகோன் கிராமத்தில், கிருஷ்ணன் நந்தகோபன்-யசோதை தம்பதியரிடம் ஒன்பது ஆண்டுகள் 50 நாட்கள் பலராமருடன் சேர்ந்து வளர்ந்தார்.

மக்கள் தொகை பரம்பல்

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, நந்தகோன் பேரூராட்சியின் மொத்த மக்கள் தொகை 11,517 ஆகும். மக்கள் தொகையில் ஆண்கள் 6,187 மற்றும் 5,330 பெண்கள் ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 861 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை 1845 ஆகும். சராசரி எழுத்தறிவு 62.7% ஆகும். மக்கள் தொகையில் பட்டியல் மக்கள் மற்றும் பழங்குடிகள் முறையே 1,493 மற்றும் 0 ஆகவுள்ளனர். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 95.96%, இசுலாமியர்கள் 3.9% மற்றும் பிறர் 0.09% ஆக உள்ளனர். [1]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்


Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!