மத்ரதேசம் காசுமீரதேசத்திற்கு தென்மேற்கிலும், தெற்கிலும், கேகயதேசத்திற்கு நேர்மேற்கிலும் அழகிய வனங்களினால் அலங்கரிக்கப்பட்ட பூமியாய் பரவி இருந்த தேசம்.[1]
இருப்பிடம்
இந்த தேசத்தின் நடுவிலிருந்து மேற்கு பாக பூமி முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாய் மேற்குமுகமாய் சரிந்தும், இந்த தேசத்தின் நடுவிலிருந்து கிழக்கு பாக பூமி முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாய் கிழக்கிலும், வடக்கிலும் சரிந்தும், இந்த தேசத்திற்கு கிழக்கில் தென் மேற்காக ஓடும் ஐராவதி நதியின் கரை வரையிலும் சாய்வாகவே இருக்கிறது. அதாவது இந்த தேசத்தின் நடுப்பகுதி உயர்ந்தும் கிழக்கு, மேற்கு பாகங்கள் சரிந்தும் மத்தளம் போல் இருப்பதால் இதற்கு மத்தளதேசம் என்ற பெயரும் உண்டு. .[2]
மலை, காடு, விலங்குகள்
இந்த தேசத்திற்கும் கேகயதேசம்|கேகயதேசத்திற்கும் நடுவில் வடக்கு கிழக்காய் ஓரு மலையுண்டு இதற்கு பகுகூடம் என்று பெயர். இந்தமலையின் தொடர் குன்றுகளும், அடர்ந்த காடுகளாலும், பெரியமலைகளினாலும், சூழப்பட்டுள்ளதால், இத்தேசத்தின் காடுகளில் காட்டு விலங்குகளும், காட்டு மரங்களும் நாவல் மரங்களும் அதிகம் உண்டு.
நதிகள்
இந்த மத்ரதேசத்திற்கு மேற்கு பாகத்தில் சிந்துந்தியும், தென்கிழக்கு பாகத்தில் ஐராவதிந்தியும் ஓடி இந்த தேசத்தை செழிக்க வைக்கின்றது.