புவேர்ட்டோ ரிக்கோ (Puerto Rico, ஸ்பானியம்: "Estado Libre Asociado de Puerto Rico"), என்பது ஐக்கிய அமெரிக்காவினுள் உள்ள சுயாட்சி பெற்ற ஒரு பிரதேசமாகும்[1].
புவேர்ட்டோ ரிக்கோ அதன் சொந்த அரசியலமைப்பையும் அதன் சொந்த சட்டமன்ற, நிர்வாக மற்றும் நீதித்துறை கிளைகளையும் கொண்டுள்ளது. குடியுரிமை, நாணயம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றைப் பகிர்வதன் மூலம் அமெரிக்காவுடனான இணைப்பு உள்ளது.
புவேர்ட்டோ ரிக்கோவில் பிறந்த அனைவரும் ஐக்கிய அமெரிக்காவின் குடியுரிமை பெற்றவர்களாயினும், இதன் ஐக்கிய அமெரிக்காவுடனான அரசியல் தொடர்புகள் இத்தீவுகளிலும் ஐக்கிய நாடுகளிலும் பலத்த சர்ச்சைக்குள்ளாகியுள்ளன[3].