மிட்வே பவளப்பாறை (அல்லது மிட்வே தீவு அல்லது மிட்வே தீவுகள், ஒலிப்பு: /ˈmɪdweɪ/; ஹவாய்: Pihemanu Kauihelani[1]) 2.4 ச.மை (6.2 ச.கிமீ) பரப்பளவு கொண்ட வடக்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள பவளப்பாறைகளாகும். ஹவாய் தீவுக்கூட்டத்தின் வடமேற்கு எல்லையில் ஹொனலுலு விற்கும் டோக்யோவிற்கும் இடையே இவை உள்ளன. இது ஐக்கிய அமெரிக்காவின் ஆளுமைக்குட்பட்ட நிலப்பகுதியாகும். இது பன்னாட்டு நாள் கோட்டிலிருந்து கிழக்கே 140 nmi (259 km; 161 mi) தொலைவிலும், சான் பிரான்சிஸ்கோவிற்கு மேற்கே ஏறத்தாழ 2,800 nmi (5,200 km; 3,200 mi)தொலைவிலும்,டோக்யோவிற்கு கிழக்கே 2,200 nmi (4,100 km; 2,500 mi) தொலைவிலும் உள்ளது. இது மோதிரம் போன்ற பவளப்பாறை தடுப்புடன் பல தீவுத்திட்டுகளைக் கொண்டுள்ளது. இரண்டு குறிப்பிடத்தக்க தீவுகள்,மணல் தீவு மற்றும் கிழக்குத்தீவு, மில்லியன் கணக்கான கடற்பறவைகளுக்கு புகலிடமாக விளங்குகின்றன. தீவுகளின் அளவுகள் கீழே காண்பிக்கப்படுகிறது:
இத்தீவுகள் வடக்கு அமெரிக்காவிற்கும் ஆசியாவிற்கும் ஏறத்தாழ நடுவிலும்,ஐக்கிய ராச்சியம்|இங்கிலாந்தின் கிரீன்விச்சிலிருந்து உலகின் சரிபாதிக்கு இருப்பதாலும் மிட்வே தீவுகள் என்பது காரணப்பெயராக அமைந்தது. மிட்வே தீவுகளில் உலகின் லேசன் அல்பட்ராஸ் பறவைகளில் 67-70% தொகையும் கருத்த அடிகள் கொண்ட அல்பட்ராஸ் பறவைகளில் 34-39% தொகையும் வாழுமிடமாக உள்ளது.[2] மூன்று மில்லியன் பறவைகளுக்கு புகலிடமாக விளங்கினாலும்,ஒவ்வொரு பறவையினமும் தமக்கென ோர் குறிப்பிட்ட இடத்தை பவளப்பாறையில் பேறுகாலத்திற்கு தேர்ந்தெடுத்துள்ளன.பதினேழு வகையான கடற்பறவைகளை இங்கு காண முடியும்.[3]