அமெரிக்க சமோவா தெற்கு பசிபிக் பெருங்கடலில் சுதந்திர நாடான சாமோவாவுக்கு தென்கிழக்கில் அமைந்துள்ள ஐக்கிய அமெரிக்காவின் உள்ளிணைக்கப்படாத ஆட்சிப் பகுதியாகும். இதன் முக்கிய தீவு துதுய்லா வாகும் இதனோடு மனுவா, ரோஸ் பவளத்தீவுகள், சுவானிஸ் தீவுகள் என்பனவும் இவ்வாட்சிப் பகுதியில் அடங்குகின்றன. குக் தீவுகளுக்கு மேற்காகவும், டொங்காவுக்கு வடக்காகவும் டொகெலாவுவில் இருந்து சுமார் 300 மைல் (500 கி.மீ.) தெற்காகவும் அமைந்துள்ள அமெரிக்க சமோவா,சமோவா தீவுத் தொடரின் ஒரு பகுதியாகும். அமெரிக்க சமோவாவுக்கு மேற்கில் வலிசு-புடானா தீவுக் கூட்டம் அமைந்துள்ளது. ஐக்கிய அமெரிக்காவின் 2000 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணிப்பீட்டின் படி ஆட்சிப் பகுதியின் மொத்த 200.22சதுர கிலோமீட்டர் பரப்பில் 57,291பேர் வசிக்கின்றார்கள்.[1]