ஹவுலாந்து தீவு

புவியியல்
அமைவிடம்அமைதிப் பெருங்கடல்
நிர்வாகம்
அமெரிக்க ஐக்கிய நாடு
Statistical designationUnited States Minor Outlying Islands
மக்கள்
மக்கள்தொகை0
ஹவுலாந்து தீவு விண்ணிலிருந்து
உலகப்படத்தில்

ஹவுலாந்து தீவு (ஒலிப்பு: /ˈhaʊlənd/) மத்திய பசிபிக் பெருங்கடலில் நிலநடுக்கோட்டின் சற்று வடக்கே அமைந்துள்ள ஆட்களில்லாத பவளப்பாறை தீவாகும். இது ஹொனலுலுவிலிருந்து தேன்மேற்கே ஏறத்தாழ 1,700 கடல் மைல்கள் (3,100 km) தொலைவில் உள்ளது.இது ஐக்கிய அமெரிக்காவின் ஆளுமைக்குட்பட்ட நிலப்பகுதியாகும். புவியியலின்படி இதனை பீனிக்ஸ் தீவுகளின் பகுதியாகக் கருதலாம்.ஹவாய் மற்றும் ஆஸ்திரேலியாவிற்கிடையே மையப்பகுதியில் அமைந்துள்ளது.ஹவுலாந்து தீவின் அமைவிடம் 0°48′07″N 176°38′3″W / 0.80194°N 176.63417°W / 0.80194; -176.63417.இதன் பரப்பு 450 ஏக்கர்கள் (1.8 km2), மற்றும் கடற்கரை 4 மைல்கள் (6.4 km) தொலைவுள்ளது.சற்றே நீள்வட்டமாக அமைந்துள்ள இத்தீவில் தாழ்மட்ட கடற்குளம் (lagoon) இல்லை.

ஹவுலாந்து தீவு தேசிய வனவிலங்கு உய்வகம் இங்கு அமைந்துள்ளது. வேறு பொருளியல் செயல்கள் எதுவும் இங்கு நடைபெறவில்லை. முறையான துறைமுகமோ படகுத்துறையோ இல்லை.[1] வானிலை ஓர் நிலநடுக்கோட்டுப் பகுதி வானிலைப் போன்று கடுமையான வெயில் உள்ள தீவாகும்.மழை மிகக் குறைவு.குடிநீர் வளம் இல்லை. இங்கு மரங்கள் அதிகமில்லை.பெரும்பாலும் கடற்பறவைகளுக்கும் கடல்வாழ் உயிரினங்களுக்கும் பேறுகால வாழ்விற்கு பயனாகும் தீவாகும்.

படிமத் தொகுப்பு

மேற்கோள்கள்

  1. "Howland Island National Wildlife Refuge". Archived from the original on 2015-06-02. பார்க்கப்பட்ட நாள் 2009-11-10.

உசாத்துணை

புற இணைப்புகள்


Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!