ஜார்விஸ் தீவு(Jarvis Island)(ஒலிப்பு: /ˈdʒɑrvɨs/; பங்கர் தீவு என முன்பு அறியப்பட்டது) ஐக்கிய அமெரிக்காவின் ஆளுமையில் உள்ள தீவு ஆகும். இத்தீவில் வாழ்பவர் எவருமிலர். அமெரிக்காவின் அருகாமையில் உள்ள எவருமில்லா தீவுகளில் இதுவும் ஒன்று. 4.5 ச.கி.மீ (1.75 ச.மைல்) பரப்பளவே கொண்ட பவளப்பாறைகளால் ஆன இத்தீவு,தென் பசிபிக் பெருங்கடலில் ஹவாய் மற்றும் குக் தீவுகளுக்கிடையே அமைந்துள்ளது.[1]