டென்னிசி அல்லது டென்னசி (Tennessee, ˌtɛnɨˈsiː) ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் நாஷ்வில், மிகப்பெரிய நகரம் மெம்ஃபிஸ். ஐக்கிய அமெரிக்காவில் 16 ஆவது மாநிலமாக 1796 இல் இது இணைந்தது.