நியூ யோர்க் (தமிழக வழக்கு - நியூயார்க்) ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் வடகிழக்குக் கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ளது. ஐக்கிய அமெரிக்காவில் 11 ஆவது மாநிலமாக 1788 இல் இணைந்தது. நாட்டில், பரப்பளவின் அடிப்படையில் 27 ஆவது பெரிய மாநிலமாகவும், மக்கள்தொகை அடிப்படையில் 4 ஆவது பெரிய மாநிலமாகவும், மக்கள்தொகை அடர்த்தியின் அடிப்படையில் 7 ஆவது பெரிய மாநிலமாகவும் இது உள்ளது. 2015 ஆம் ஆண்டுக்குரிய மதிப்பீட்டின்படி இம்மாநிலத்தின் மக்கள்தொகை 19.8 மில்லியன்.[3]