அரிசோனா ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் பீனிக்ஸ் ஆகும். இது ஐக்கிய அமெரிக்காவில் 48 ஆவது மாநிலமாக 1912 இல் இணைந்தது. இங்கு செம்புத்தாது மிகுந்திருப்பதால் செம்பு மாநிலம் எனவும் வழங்கப்படுகிறது.