பெப்ரவரி 9 - மிகப் பழமையானதாகக் கருதப்படும் எஸ்.எம்.எஸ்.எஸ் ஜெ031300.36-670839.3 என்ற விண்மீன் 13.6 பில்லியன் ஆண்டுகள் வயதுடையது என ஆத்திரேலிய அறிவியலாளர்கள் கணக்கிட்டுள்ளனர்.
பெப்ரவரி 9 - ஆபிரிக்காவிற்கு வெளியே சுமார் 8 லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதனின் கால்தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
மார்ச் 18 - சனிக் கோளின் டைட்டான் துணைக்கோளில் திரவ அலைகள் காணப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. வெளி உலகில் திரவ அலை கண்டுபிடிக்கப்பட்டது இதுவே முதற் தடவையாகும்.
மார்ச் 27 - இலங்கையின் மனித உரிமைகள் விவகாரம் தொடர்பில் அமெரிக்காவின் முன்னெடுப்பில் ஜநா மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் நிறைவேறியது. ஆதரவாக 23 நாடுகளும் எதிராக 12 நாடுகளும் வாக்களித்தன. இந்தியா உட்பட 12 நாடுகள் வாக்கெடுப்பிலிருந்து விலகியிருந்தன.
மார்ச் 27 - ஈழப்போரின் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்றதாகக் கருதப்படும் போர்க்குற்றங்களை விசாரணை செய்ய பன்னாட்டு விசாரணைக் குழுவை அமைக்க ஜநா மனித உரிமைகள் பேரவை அங்கீகரித்தது.
ஏப்ரல் 30 - இலங்கையில்பளை நோக்கிச் சென்ற விரைவு தொடருந்து ஒன்று மாத்தறை நோக்கிச் சென்ற விரைவு வண்டி ஒன்றுடன் குருணாகல் பொத்துகெர என்ற இடத்தில் நேருக்கு நேர் மோதியதில் 75 பேர் காயமடைந்தனர்.
மே 2 - 3,607.4 மீ உயரத்தில் உலகின் மிக உயரமான சுரங்க ரயில் பாதை சீனாவில் திறக்கப்பட்டது.
மே 12 - 1974 ஆம் ஆண்டில் சைப்பிரசு நாட்டை ஆக்கிரமித்து வடக்கு சைப்பிரசு என்ற அங்கீகரிக்கப்படாத பிராந்தியத்தை உருவாக்கியமைக்காக துருக்கி 124 மில்லியன் டாலர்கள் நட்ட ஈடு செலுத்த வேண்டும் என ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
மே 13 - எயிட்டியின் வடக்குக் கரைக்கு அப்பால் கொலம்பசு பயன்படுத்திய கப்பலின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
மே 18 - ஈழப்போரின் இறுதிக் கட்டத்தில் இலங்கைத் தரைப்படையால் கைது செய்யப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் இசைப்பிரியா தொடர்பாக இராணுவத்தினர் இழைத்ததாகக் கருதப்படும் மேலும் பல போர்க்குற்றப் படங்கள் வெளியாகின.
சூன் 13 - பர்மாவின் எதிர்க்கட்சித் தலைவர் ஆங் சான் சூச்சி அரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற நாடாளுமன்றத் தடையை நாடாளுமன்றக் குழு அங்கீகரித்தது.
சூன் 14 - உக்ரைனிய இராணுவ விமானம் ஒன்றை உருசிய-ஆதரவுக் கிளர்ச்சியாளர்கள் சுட்டு வீழ்த்தியதில் அதில் பயணம் செய்த 49 பேரும் உயிரிழந்தனர்.
சூன் 18 - துருக்கியில் 1980 இல் இடம்பெற்ற ஆட்சிக் கவிழ்ப்பில் பங்குகொண்ட முன்னாள் அரசுத்தலைவர் கேனன் எவ்ரென், 96, ஆயுள் தண்டனை பெற்றார்.
சூன் 19 - நைஜீரியாவின் முன்னாள் இராணுவ ஆட்சியாளர் சானி அபாச்சா தனது ஆட்சிக் காலத்தில் 1990களில் கொள்ளையடித்த பணத்தின் ஒரு பகுதியான 227 மில்லியன் டாலர்களை லீக்டன்ஸ்டைன் நைஜீரியாவுக்குக்த் திரும்பத் தர ஒப்புதல் அளித்துள்ளது.
சூன் 20 - இரண்டாம் உலகப் போரின் பின்னர் முதற் தடவையாக தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறிய அகதிகளின் எண்ணிக்கை 50 மில்லியனை 2013 ஆம் ஆண்டில் தாண்டியது.
சூலை 16 - 1995 பொசுனியா போரின் போது சிரெபிரெனிக்காவில் 300 இற்கும் மேற்பட்ட மக்களின் படுகொலைக்கு நெதர்லாந்து அரசாங்கம் பொறுப்பு என நெதர்லாந்து நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்தது.
சூலை 18 - பொலிவியாவில் 10 வயது சிறுவர்கள் பாடசலைக்கு சென்றுகொண்டே சுய தொழிலில் ஈடுபடவும், 12 வயதுக்கு மேற்பட்டவர்களை ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு அமர்த்தவும் அனுமதிக்க சட்டம் கொண்டு வரப்பட்டது.
ஆகத்து 15 - பிலிப்பீன்சில் பாங்சமோரோ என்ற தனி அலகு ஒன்றை அமைப்பதற்கு மோரோ இசுலாமிய விடுதலை முன்னணியுடன் பிலிப்பீன்சு அரசு ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தியது.
ஆகத்து 19 - இசுலாமிய தேச இயக்கத்தினர் 2012 இல் சிரியாவில் கடத்தப்பட்ட அமெரிக்க செய்தியாளர் ஜேம்சு ஃபோலி என்பவரின் தலையைத் துண்டித்துக் கொலை செய்து, அதைக் காணொளியில் எடுத்து வெளியிட்டனர்.
செப்டம்பர் 3 - இலங்கை, முன்னேஸ்வரம் பத்திரகாளியம்மன் கோயிலின் வருடாந்த மிருக வேள்வி பூசையை உரிய அனுமதி பெற்ற பின்னர் நடத்தலாம் என உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
அக்டோபர் 31 - புர்க்கினா பாசோவில் இடம்பெற்ற கிளர்ச்சியை அடுத்து அரசுத்தலைவர் பிளைசி கொம்போரே பதவி விலகினார். இராணுவத்தலைவர் ஒனோரே டிராரே இடைக்காலப் பொறுப்பை ஏற்றார்.
நவம்பர் 14 - 67பி வால்வெள்ளியில் தரையிறங்கிய ஃபிலே விண்கலம் பூமியுடன் மீண்டும் தொடர்புகளை ஏற்படுத்தியதை அடுத்து அதன் மின்கலன்கள் போதிய சூரிய வெளிச்சம் இல்லாமையினால் செயலிழந்தன.
டிசம்பர் 12 - இலங்கைகொழும்பு நகரில் இருந்து 20 கிமீ தொலைவில் உள்ள அத்துருகிரிய என்ற இடத்தில் வான்படையின் அந்தோனொவ்-32 ரக விமானம் ஒன்று வீழ்ந்து எரிந்ததில் 4 படையினர் கொல்லப்பட்டனர். ஒருவர் கடும் காயங்களுடன் உயிர் தப்பினார்.
டிசம்பர் 15 - ஆத்திரேலியாவின்சிட்னி நகரில் உணவுசாலை ஒன்றில் ஆயுதம் தாங்கிய நபர் 17 பேரைப் பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்த நிகழ்வு 16 மணி நேரத்தின் பின்னர் டிசம்பர் 16 அதிகாலை காவல்துறையின் அதிரடித் தாக்குதல் மூலம் முடிவுக்கு வந்தது. இரண்டு பணயக் கைதிகளும் துப்பாக்கி நபரும் கொல்லப்பட்டனர். நால்வர் காயமடைந்தனர்.