நவம்பர் 11
நவம்பர் 11 (November 11) கிரிகோரியன் ஆண்டின் 315 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 316 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 50 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
பிறப்புகள்
- 1821 – பியோதர் தஸ்தயெவ்ஸ்கி, உருசிய எழுத்தாளர் (இ. 1881)
- 1847 – பிரெட்ரிக் வில்லியம் ஸ்டீவென்ஸ், பிரித்தானியக் கட்டிடக் கலைஞர் (இ. 1900)
- 1875 – வெசுட்டோ மெல்வின் சுலிப்பர், அமெரிக்க வானியலாளர் (இ. 1969)
- 1885 – அனசூயா சாராபாய், இந்தியாவின் பெண்கள் தொழிலாளர் இயக்கத்தின் முன்னோடி (இ. 1972)
- 1888 – அபுல் கலாம் ஆசாத், இந்திய அரசியல்வாதி (இ. 1958)
- 1888 – ஆச்சார்ய கிருபளானி, இந்திய அரசியல்வாதி (இ. 1982)
- 1899 – கி. ஆ. பெ. விசுவநாதம், தமிழறிஞர் (இ. 1994)
- 1908 – பி. எஸ். பாலிகா, இந்திய எழுத்தாளர், பதிப்பாளர் (இ. 1958)
- 1909 – எம்பார் எஸ். விஜயராகவாச்சாரியார், இறைக்கதை சொற்பொழிவாளர் (இ. 1991)
- 1911 – டி. பி. ராஜலட்சுமி, தமிழ்த் திரைப்படத்துறையின் முதல் நடிகை, முதல் பெண் இயக்குநர் (இ. 1964)
- 1917 – மரகதம் சந்திரசேகர், இந்திய அரசியல்வாதி (இ. 2001)
- 1921 – எஸ். தட்சிணாமூர்த்தி, தென்னிந்திய இசையமைப்பாளர், பின்னணிப் பாடகர், கருநாடக இசைக் கலைஞர் (இ. 2012)
- 1922 – கர்ட் வானெகெட், அமெரிக்க எழுத்தாளர் (இ. 2007)
- 1937 – ப. ஆப்டீன், ஈழத்து எழுத்தாளர்
- 1937 – இசுரீபன் லூவிசு, கனடிய அரசியல்வாதி
- 1943 – அனில் காகோட்கர், இந்திய அணு அறிவியலாளர்
- 1945 – டானியல் ஒர்ட்டேகா, நிக்கராகுவா அரசுத்தலைவர்
- 1955 – ஜிக்மே சிங்கே வாங்சுக், பூட்டான் மன்னர்
- 1957 – மிசேல் டி கிரெட்சர், இலங்கை-ஆத்திரேலியப் புதின எழுத்தாளர்
- 1960 – பீ. எம். புன்னியாமீன், இலங்கை எழுத்தாளர், நூலாசிரியர், வெளியீட்டாளர் (இ. 2016)
- 1963 – பொன்னம்பலம், தமிழக நடிகர்
- 1974 – லியோனார்டோ டிகாப்ரியோ, அமெரிக்க நடிகர்
- 1974 – அமுல் மசும்தார், இந்தியத் துடுப்பாட்ட வீரர்
- 1985 – ராபின் உத்தப்பா, இந்தியத் துடுப்பாட்ட வீரர்
- 1994 – சஞ்சு சாம்சன், இந்தியத் துடுப்பாட்ட வீரர்
- 1997 – மயங்க் மார்க்கண்டே, இந்தியத் துடுப்பாட்ட வீரர்
இறப்புகள்
- 683 – முதலாம் யசீத், 2-ஆம் கலீபா (பி. 647)
- 1831 – நாட் டர்னர், அமெரிக்கக் கிளர்ச்சித் தலைவர் (பி. 1800)
- 1880 – லுக்ரிடியா மோட், அமெரிக்க செயற்பாட்டாளர் (பி. 1793)
- 1917 – லில்லியுகலானி, அவாய் அரசி (பி. 1838)
- 1993 – கப்டன் மயூரன், தமிழீழ விடுதலைப் புலிப் போராளி (பி. 1970)
- 1995 – சுந்தா, தமிழக எழுத்தாளர், கல்கியின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர் (பி. 1913)
- 1999 – சத்தியவாணி முத்து, தமிழக அரசியல்வாதி (பி. 1923)
- 2004 – யாசிர் அரஃபாத், பாலத்தீனத் தலைவர், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் (பி. 1929)
- 2005 – பீட்டர் டிரக்கர், ஆத்திரிய-அமெரிக்க எழுத்தாளர் (பி. 1909)
- 2016 – கே. சுபாஷ், தென்னிந்தியத் திரைப்பட இயக்குநர், திரைக்கதை ஆசிரியர்
சிறப்பு நாள்
வெளி இணைப்புகள்
|
|