ஜனவரி 19 - ஐபிஎம் நிறுவனம் 1992 ஆண்டிற்கான அறிக்கையில் $4.97 பில்லியன் நஷ்டத்தினை அறிவித்தது, இன்றுவரையில் அமெரிக்காவில் வெறொரு நிறுவனம் இந்த அளவில் நஷ்டம் அடைந்ததில்லை.
பெப்ரவரி 17 - எயிட்டியில் கப்பல் கவிழ்ந்தது. அக்கப்பலில் பயணித்த 1,500 பயணிகளில் 1215 பேர் இறந்தனர்.
பெப்ரவரி 24 - கனடிய பிரதமர் பிரையன் மல்ரோனி ராஜினாமா செய்தார். கிம் காம்ப்பெல் கனடாவின் முதல் பெண் பிரதமராக பொறுப்பேற்றார்.
பெப்ரவரி 26 - உலக வர்த்தக மைய குண்டுவெடிப்பு: நியூயார்க் நகரத்தில், உலக வர்த்தக மையம் வடக்கு கோபுரம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேனில் இருந்த குண்டு வெடித்ததில் ஆறு பேர் இறந்தனர், ஆயிரத்திற்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.