லலித் வில்லியம் சமரசேகர அத்துலத்முதலி (நவம்பர் 26, 1936 - ஏப்ரல் 23, 1993) இலங்கையின் முன்னாள் அரசியல்வாதியும் முன்னாள் பாதுகாப்பு, வேளாண்மை, கல்வி அமைச்சரும் பாதுகாப்பு பிரதியமைச்சரும் ஆவார்.
தொடக்க வாழ்க்கை
அத்துலத்முதலி தனது பள்ளிப் படிப்பை கொழும்பு றோயல் கல்லூரியில் முடித்தார். பின்னர் சட்டவியலில் மேற்படிப்புக்காக 1955 ஆம் ஆண்டு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் இயேசுக் கல்லூரியில் இணைந்து படித்தார். 1958 ஆம் ஆண்டு ஆக்சுபோட் பல்கலையின் மாணவர் ஒன்றியத்தினது தலைவராக தெரிவுச் செய்யப்பட்ட முதல் இலங்கையர் ஆவார் மேலதிகமாக 1956 ஆம் ஆண்டில் செயலாளராகவும், 1957 ஆம் ஆண்டில் பொருளாலராகவும் அதே ஒண்ரியத்தில் பதவி வகித்தார்.[1][2]
சட்டப்படிப்பை முடித்த லலித் கிரே இண் மூலமாக சட்டத்த்ரணியாக பதிவியேற்றார். அதன் பின்னர் சிங்கப்பூர் பல்கலைக்கழகம், எபிரேய பல்கலைக்கழகம், எடின்புரோ பல்கலைக்கழகம், அலகாபாத் பல்கலைக்கழகம் என்பவற்றில் விரிவுரையாளராக பணியாற்றினார். பின்னர் நாடு திரும்பி இலங்கை சட்டக் கல்லூரியில் விரிவுரையாளராக இணைந்தார்.[2]
அரசியல் வாழ்க்கை
1972 ஆம் ஆண்டு முன்னாள் இலங்கை பிரதமர் டட்லி சேனாநாயக்காவின் அழைப்பை ஏற்று ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்தார். அத்துலத்முதலி அகலவத்தை தேர்தல் தொகுத்திக்கான கட்சியின் முதன்மை அமைப்பாளராக ஆக்கப்பட்டார். அத்துலத்முதலி 1977 ஆண்டின் இலங்கை பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக இரத்மலானை தேர்தல் தொகுதல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று இலங்கை நாடாளுமன்றம் சென்றார். இவருக்கு வர்தக அமைச்சு கொடுக்கப்பட்டு ஒரு ஆண்டின் பின்னர் துறைமுக அமைச்சும் கொடுக்கப்பட்டது. பின்னர் பாதுகாப்பு அமைச்சும் கொடுக்கப்பட்டது. 1988 ஆண்டில் ஜே. ஆர். ஜயவர்தனாவின் விடுமுறை அறிவிப்பைத் தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சியின் அதிபர் வேட்பாளராவதற்கு முயன்றார். எனினும் இதில் ரணசிங்க பிரேமதாசா வேட்பாளராக தெரிவுச் செய்யப்பட்டார். பின்னர் பிரேமதாசா அதிபரான போது இவருக்கு பிரதமர் பதவி கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டப் போதும் வேளாண்மை அமைச்சும் பின்னர் கல்வி உயர்கல்வி அமைச்சுமே கொடுக்கப்பட்டது.
பிரேமதாசாவின் தலைமையில் விரக்தியுற்ற அத்துலத்முதலி அவர் மீது நம்பிக்கையில்லா மசோதா ஒன்றை கொண்டுவந்து தோல்வியுற்றார். இதனால் இவரும் இவருக்கு ஆதாரவளித்தவர்களும் கட்சியிலிருந்து விலக்கப்பட்டனர். ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து விலகிய இவர் தனது தலைமையில் மக்களாட்சி ஐக்கிய தேசிய முன்னணி என்றக் கட்சியை தொடங்கினார்.[3]
கொலை
1993 ஏப்ரல் 23 ஆம் நாள் கொழும்பு கிருலப்பனையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்ட மொன்றின் போது துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டார். அரசு விடுதலைப் புலிகள் மீது பழிசுமத்தி அடுத்த நாள் சம்பவ இடத்திற்கு அண்மையில் சயனைட் உண்டு இறந்து காணப்பட்ட தமிழ் இளைஞரே கொலையாளி என்றது. இருப்பினும் அப்போதைய அதிபர் பிரேமதாசா மீதும் சந்தேகம் நிலவிவந்தது.[3][4][5]
மேற்கோள்கள்
- ↑ "Old Members' Notes and News". Jesus College Record: 72-3. 1993/4.
- ↑ 2.0 2.1 Bandaranaike, Anura. "It must go". sundaytimes. http://www.sundaytimes.lk/971130/news3.html. பார்த்த நாள்: 2008-05-20.
- ↑ 3.0 3.1 Dissanayake, S.N. (2002/11/27). "Lalith Athulathmudali - a talented leader snuffed out in his prime" (in ஆங்கிலம்). Dailynews (The Associated Newspapers of Ceylon Ltd.) இம் மூலத்தில் இருந்து 2007-09-30 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070930013013/http://www.dailynews.lk/2002/11/27/fea03.html. பார்த்த நாள்: 2008-05-21.
- ↑ Ilankai Thamil Sangam Commentary (7 October 2007). "Lalith Athulathmudali Murder: the Truth" (in ஆங்கிலம்). tamilnation.org. https://tamilnation.org/tamileelam/democracy/971007lalith.htm. பார்த்த நாள்: 2008-05-21.
- ↑ Mudliyar (23 February 2007). "How Lalith Athulathmudali assasination case solved, the joke of the century." (in ஆங்கிலம்). www.lankanewspapers.com. http://www.lankanewspapers.com/news/2007/2/12591_space.html. பார்த்த நாள்: 2008-05-21.