பெப்ரவரி 27
பெப்ரவரி 27 (February 27) கிரிகோரியன் ஆண்டின் 58 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 307 (நெட்டாண்டுகளில் 308) நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
பிறப்புகள்
- 272 – முதலாம் கான்ஸ்டன்டைன், உரோமைப் பேரரசர் (இ. 337)
- 1807 – ஹென்றி வாட்ஸ்வொர்த் லாங்ஃபெல்லோ, அமெரிக்கக் கவிஞர் (இ. 1882)
- 1856 – ஆல்பிரட் ஐன்ஹார்ன், செருமானிய வேதியியலாளர் (இ. 1917)
- 1897 – பெர்னார்டு இலியோத், பிரான்சிய வானியலாளர் (இ. 1952)
- 1902 – லூசியோ கோஸ்தா, பிரான்சிய-பிரேசில் கட்டிடக்கலைஞர் (இ. 1998)
- 1912 – குசுமாகரசு, இந்திய எழுத்தாளர், கவிஞர் (இ. 1999)
- 1926 – டேவிட் ஹண்டர் ஹியூபெல், நோபல் பரிசு கனடிய உடலியங்கியலாளர், நரம்பியலாளர்
- 1932 – எலிசபெத் டெய்லர், ஆங்கிலேய-அமெரிக்க நடிகை (இ. 2011)
- 1934 – ரால்ஃப் நேடர், அமெரிக்க அரசியல்வாதி, செயற்பாட்டாளர்
- 1943 – பி. எஸ். எடியூரப்பா, இந்திய அரசியல்வாதி
- 1962 – இராபர்ட் ஸ்பென்சர், அமெரிக்க எழுத்தாளர்
- 1967 – ஜோனாதன் ஐவ், ஆங்கிலேய உற்பத்திப் பொருள் வடிவமைப்பாளர்
- 1975 – கிறிஸ்டோபர் பி. லாண்டன், அமெரிக்க இயக்குநர்
- 1977 – ஜேம்ஸ் வான், மலேசிய-ஆத்திரேலிய இயக்குநர்
- 1982 – புருனோ சோரெசு, பிரேசிலிய டென்னிசு வீரர்
- 1983 – முகமது நபௌசு, லிபிய ஊடகவியலாளர் (இ. 2011)
- 1986 – சந்தீப் சிங், இந்திய வளைதடிப் பந்தாட்ட வீரர்
இறப்புகள்
- 1712 – முதலாம் பகதூர் சா, முகலாயப் பேரரசர் (பி. 1643)
- 1906 – சாமுவேல் பியேர்பாயிண்ட் இலாங்லே, அமெரிக்க வானியலாளர், இயற்பியலாளர் (பி. 1834)
- 1931 – சந்திரசேகர ஆசாத், இந்திய செயற்பாட்டாளர் (பி. 1906)
- 1936 – இவான் பாவ்லோவ், நோபல் பரிசு பெற்ற உருசிய மருத்துவர் (பி. 1849)
- 1939 – நதியெஸ்தா குரூப்ஸ்கயா, உருசியப் புரட்சியாளர், அரசியல்வாதி, கல்வியாளர் (பி. 1869)
- 1956 – கணேஷ் வாசுதேவ மாவ்லங்கர், இந்திய அரசியல்வாதி (பி. 1888)
- 1983 – நிகோலாய் அலெக்சாந்திரோவிச் கொசூரேவ், உருவிய வானியலாளர், வானியற்பியலாளர் (பி. 1908)
- 1989 – கொல்வின் ஆர். டி சில்வா, இலங்கை இடதுசாரி அரசியல்வாதி (பி. 1907)
- 1993 – லில்லியன் கிஸ், அமெரிக்க நடிகை (பி. 1893)
- 1998 – ஜார்ஜ் எச் ஹிட்சிங்ஸ், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க மருந்தியலாளர் (பி. 1905)
- 2005 – புகழேந்தி, தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் (பி. 1929)
- 2008 – சுஜாதா, தமிழக எழுத்தாளர் (பி. 1935)
- 2010 – நானாஜி தேஷ்முக், இந்திய செயற்பாட்டாளர் (பி. 1916)
- 2012 – வேலூர் ஜி. ராமபத்ரன், தமிழக மிருதங்கக் கலைஞர் (பி. 1929)
- 2014 – ந. பாலேஸ்வரி, ஈழத்துப் புதின எழுத்தாளர் (பி. 1929)
- 2015 – போரிசு நெம்த்சோவ், உருசிய அரசியல்வாதி (பி. 1959)
சிறப்பு நாள்
வெளி இணைப்புகள்
|
|