ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பின் இரண்டாம் சட்டவிதியின்படி ஐக்கிய அமெரிக்க நாட்டின் செயலாக்க அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன்படி கூட்டரசு சட்டத்தை செயற்படுத்தவும் கூட்டரசு அதிகாரிகள், பேராளர்கள், கட்டுப்பாட்டு ஆணையங்கள் மற்றும் நீதிமன்றங்களின் அதிகாரிகள் ஆகியோரை நியமிக்கவும் மேலவையின் பரிந்துரையின்படியும் ஒப்புமையுடனும் வெளிநாடுகளுடன் இறுதி உடன்பாடுகளை மேற்கொள்ளவும் அதிகாரமுள்ளது. தவிரவும் தண்டனைகளுக்கு மன்னிப்பு வழங்கிடவும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும் சட்டமன்றத்தின் இரு அவைகளையும் கூட்டவும் தள்ளி வைக்கவும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.[6] தமது கட்சி சார்பில் சட்டமன்ற அலுவலை முடிவு செய்யும் பொறுப்பும் குடியரசுத் தலைவருக்கு உண்டு. ஐக்கிய அமெரிக்காவின் உள்நாட்டு, வெளிநாட்டுக் கொள்கைகளை வழிநடத்தும் பொறுப்பும் இவருக்குள்ளது.[7] ஐக்கிய அமெரிக்கா நிறுவப்பட்டதிலிருந்து குடியரசுத் தலைவரின் அதிகாரங்களும் கூட்டரசின் பங்காற்றலும் குறிப்பிடத்தக்க அளவில் வளர்ந்துள்ளது.[8]
குடியரசுத் தலைவர் நான்காண்டுகளுக்கு ஒருமுறை மக்களால் வாக்காளர் குழு மூலமாக மறைமுகமாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றார்; தேசிய அளவில் இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் இரு கூட்டரசு பதவிகளில் இதுவொன்று, மற்றது ஐக்கிய அமெரிக்காவின் துணைக் குடியரசுத் தலைவர் பதவிக்கானதாகும்.[9] 1951இல் இயற்றப்பட்ட ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பின் 22ஆவது சட்டத்திருத்தத்தின்படி மூன்றாம் முறை தொடர்ந்து முழுமைக்கால குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவது தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒருவர் முன்னதாக குடியரசுத் தலைவராகவோ, மற்றொருவர் பதவிக் காலத்தில் இரண்டாண்டுகளுக்கு மேலாக குடியரசுத் தலைவர் பொறுப்பில் இருந்தாலோ ஒருமுறைக்கு மேலாக போட்டியிடுவதை தடை செய்கின்றது. இதுவரை 58 முழு நான்காண்டுப் பதவிக் காலங்களில் 44 நபர்கள் (கிளீவ்லாண்ட் தொடர்ச்சியாகவின்றி இருமுறை தனித்தனியாக இருந்ததை கணக்கிலெடுத்து) 45 பதவிகளில் இருந்துள்ளனர்.[10] சனவரி 20, 2021இல் ஜோ பைடன் 46வது குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்றார்;இவரே தற்போதைய குடியரசுத் தலைவராக விளங்குகின்றார்.
தகுதிகள்
அரசியலமைப்பின் இரண்டாவது சட்டவிதியின் முதல் பிரிவு, ஐந்தாம் உட்கூறு இப்பதவிக்கானத் தகுதிகளை விவரிக்கின்றது. குடியரசுத் தலைவர்:
ஐக்கிய அமெரிக்காவின் இயல் குடிமகனாக இருத்தல் வேண்டும்;[note 1]
முப்பத்தைந்து அகவையினராக இருத்தல் வேண்டும்.42 அகவையில் தியொடோர் ரோசவெல்ட் மிகுந்த இளையவராகவும் 78 அகவையில் ஜோ பைடன் மிகுந்த வயதினராகவும் பதவி ஏற்றனர்.
ஐக்கிய அமெரிக்காவில் குறைந்தது பதினான்காண்டுகள் நிரந்தரமாக வசித்தவராக இருத்தல் வேண்டும்.
↑அரசியலமைப்பு ஏற்கப்பட்ட காலத்தில் அகவை மற்றும் வசிப்பிடம் குறித்த தகுதிகளை பெற்றிருந்த, வெளிநாட்டில் பிறந்த அமெரிக்கக் குடிமகன்கள் தகுதி பெற்றவராக விலக்களிக்கப்பட்டனர்; இருப்பினும் இந்த விதிவிலக்கு தற்போது வழக்கொழிந்து போனது.
மேற்சான்றுகள்
↑Safire, William (October 12, 1997). "On language: POTUS and FLOTUS". New York Times. New York: The New York Times Company. பார்க்கப்பட்ட நாள் May 11, 2014.
↑Pfiffner, J. P. (1988). "The President's Legislative Agenda". Annals of the American Academy of Political and Social Science499: 22–35. doi:10.1177/0002716288499001002.
↑"The Executive Branch". Whitehouse.gov. Archived from the original on ஜனவரி 26, 2009. பார்க்கப்பட்ட நாள் January 20, 2021. {{cite web}}: Check date values in: |archive-date= (help). குரோவர் கிளீவ்லாண்ட் தொடர்ச்சியாக இல்லாது இருமுறை குடியரசுத் தலைவராக இருந்துள்ளார், எனவே அவர் இருமுறை கணக்கிடப்பட்டுள்ளார்; 22வது மற்றும் 24வது குடியரசுத் தலைவராக இருந்துள்ளார்.
"Life Portraits of the American Presidents". C-SPAN. பார்க்கப்பட்ட நாள் October 7, 2005. Companion website for the C-SPAN television series: American Presidents: Life Portraits
"Presidents' Occupations". பார்க்கப்பட்ட நாள் August 20, 2007. Listing of every President's occupations before and after becoming the Commander in Chief
"The Masonic Presidents Tour". The Masonic Library and Museum of Pennsylvania. Archived from the original on அக்டோபர் 12, 2014. பார்க்கப்பட்ட நாள் October 7, 2005. Brief histories of the Masonic careers of Presidents who were members of the Freemasons
"The Presidents". American Experience. பார்க்கப்பட்ட நாள் March 4, 2007. PBS site on the American presidency