ஐக்கிய அமெரிக்காவின் கூட்டரசு என்பது ஐக்கிய அமெரிக்காவின் அரசமைப்புச் சட்டத்தால் ஏற்படுத்தப்பட்ட நடுவண் அரசைக் குறிக்கிறது. இது சட்டமன்றம், செயலாற்றுப் பேரவை, நீதியமைப்பு ஆகிய மூன்று பிரிவுகளைக் கொண்டது. இந்த மூன்று பிரிவுகளின் அதிகாரம் பிரித்து கொடுக்கப்பட்டு, ஒன்றை ஒன்று கட்டுப்படுத்தி சீர்படுத்தும் (check and balances) வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் சட்டமன்றம் ஐக்கிய அமெரிக்க காங்கிரஸ் ஆகும். இது ஐக்கிய அமெரிக்காவின் சட்டங்களை இயற்றுகின்றது.[1][2][3]
அமெரிக்காவின் செயலாற்று அதிகாரம் குடியரசு தலைவரிடமும், அவரது அமைச்சர்குழுவிடமும் உள்ளது.
அமெரிக்காவின் நீதியமைப்பின் உச்ச அதிகாரம் ஐக்கிய அமெரிக்காவின் உயர் நீதிமன்றத்திடம் உள்ளது.
இவற்றையும் பார்க்க
மேற்கோள்கள்