அக்டோபர் 12
அக்டோபர் 12 (October 12) கிரிகோரியன் ஆண்டின் 285 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 286 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 80 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- கிமு 539 – பாரசீகத்தின் சைரசின் இராணுவம் பாலிலோனைப் பிடித்தது.
- 1492 – கிறித்தோபர் கொலம்பசும் அவரது குழுவினரும் கரிபியனில் பகாமாசை அடைந்தனர். அவர் கிழக்கிந்தியத் தீவுகளை அடைந்ததாக நினைத்தார்.
- 1582 – கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் புதிய நாட்காட்டியில் இவ்வாண்டின் இந்நாள் இடம்பெறவில்லை.
- 1654 – நெதர்லாந்தில் டெல்ஃப்ட் நகரில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் நூற்றுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
- 1748 – பிரித்தானிய, எசுப்பானியக் கடற்படையினர் அவானாவில் போரில் ஈடுபட்டன.
- 1785 – ரிச்சார்ட் ஜான்சன் என்பவர் தமிழ்நாட்டின் முதல் செய்திப்பத்திரிகையான மதராசு கூரியர் என்ற ஆங்கில வார இதழை வெளியிட்டார்.
- 1792 – கொலம்பசு நாள் முதல் தடவையாக நியூயார்க் நகரில் கொண்டாடப்பட்டது.
- 1798 – பிளம்மிய, லக்சம்பர்க் விவசாயிகள் பிரெஞ்சு ஆட்சிக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
- 1798 – இலங்கை பிரித்தானியாவின் அரச குடியேற்ற நாடாக அறிவிக்கப்பட்டது. பிரெடெரிக் நோர்த் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.[1]
- 1822 – முதலாம் பேதுரு பிரேசில் பேரரசராக முடிசூடினார்.
- 1823 – சார்லசு மேகிண்டோச் தான் தயாரித்த முதலாவது மழையங்கியை விற்பனைக்கு விட்டார்.
- 1871 – பிரித்தானிய இந்தியா குற்றப் பரம்பரைச் சட்டத்தைக் கொண்டு வந்தது. இதன்படி 160 இற்கும் மேற்பட்ட உள்ளூர் குழுக்கள் 'குற்ற சமூகங்களாக' அறிவிக்கப்பட்டன. 1949 இல் இச்சட்டம் விலக்கப்பட்டது.
- 1901 – அமெரிக்க அரசுத்தலைவர் தியொடோர் ரோசவெல்ட் "செயலாட்சி மாளிகை" என்ற பெயரை வெள்ளை மாளிகை என அதிகாரபூர்வமாக மாற்றினார்.
- 1915 – முதலாம் உலகப் போர்: கூட்டுப்படைகளை பெல்ஜியத்தில் இருந்து தப்ப உதவியமைக்காக பிரித்தானியத் தாதி எடித் கவெல் என்பவர் செருமனியரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
- 1918 – மினெசோட்டாவில் கிளம்பிய காட்டுத்தீயினால் 453 பேர் கொல்லப்பட்டனர்.
- 1944 – இரண்டாம் உலகப் போர்: ஏதென்சு நகரம் அச்சு நாடுகளின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்டது.
- 1960 – சப்பான் சோசலிசக் கட்சித் தலைவர் இனசீரோ அசனூமா குத்திப் படுகொலை செய்யப்பட்டமை நேரடியாகத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பபட்டது.
- 1963 – சோவியத் ஒன்றியத்தில் 23 ஆண்டுகளாக சிறை வக்கப்பட்டிருந்த இயேசு சபை மதப்பரப்புனர் வால்டர் சிசெக் விடுதலை செய்யப்பட்டார்.
- 1964 – சோவியத் ஒன்றியம் வசுகோத் 1 விண்கலத்தை விண்ணுக்கு ஏவியது. இதுவே பல விண்வெளி வீரர்களை விண்ணுக்குக் கொண்டு சென்ற முதலாவது விண்கலமும், விண் உடைகள் இல்லாமல் விண்ணுக்குச் சென்ற முதலாவது விண்கலமும் ஆகும்..
- 1968 – எக்குவட்டோரியல் கினி எசுப்பானியாவிடம் இருந்து விடுதலை பெற்றது.
- 1970 – வியட்நாம் போர்: கிறித்துமசுக்கு முன்னதாக 40,000 அமெரிக்கப் படையினர் வெளியேறவிருப்பதாக அமெரிக்கத் தலைவர் ரிச்சர்ட் நிக்சன் அறிவித்தார்.
- 1971 – பாரசீகப் பேரரசின் 2,500 ஆம் ஆண்டு நிறைவு விழா கொண்டாடப்பட்டது.
- 1976 – மும்பையில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற இந்தியன் ஏர்லைன்சு விமானம் 171 மும்பை வானூர்தி நிலையத்தில் அவசரமாகத் தரையிறங்கும்போது வெடித்ததில், திரைப்பட நடிகை ராணி சந்திரா உட்பட அதில் பயணம் செய்த அனைத்து 95 பேரும் உயிரிழந்தனர்.
- 1984 – ஐரியக் குடியரசுப் படையினரின் குண்டுவெடிப்பில் இருந்து ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் மார்கரெட் தாட்சர் காயமெதுவும் அடையாமல் உயிர் தப்பினார். குண்டுவெடிப்பில் ஐவர் கொல்லப்பட்டனர், 31 பேர் காயமடைந்தனர்.
- 1986 – மன்னார் அடம்பனில் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியதில் முதன் முதலாக சிங்கள இராணுவத்தினர் சிறைப்பிடிக்கப்பட்டனர். இத்தாக்குதலில் புலிகளின் தளபதிகளில் ஒருவரான லெப். கேணல் விக்டர் கொல்லப்பட்டார்.
- 1986 – ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத், எடின்பரோ கோமகன், இளவரசர் பிலிப் ஆகியோர் சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டனர்
- 1992 – எகிப்தில் கெய்ரோ நகரில் 5.8 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 510 பேர் உயிரிழந்தனர்.
- 1993 – இந்தியாவின் தேசிய மனித உரிமை ஆணையம் அமைக்கப்பட்டது.
- 1994 – மெகல்லன் விண்ணுளவி வெள்ளியின் வளிமண்டலத்தை அடைந்ததை அடுத்து அதனுடனான தொடர்புகளை நாசா இழந்தது. இது அடுத்தடுத்த நாட்களில் எரிந்து சேதமடைந்தது.
- 1999 – முன்னாள் சோவியத் தன்னாட்சிக் குடியரசு அப்காசியா சியார்சியாவிடம் இருந்து விடுதலை பெற்றது.
- 1999 – பாகித்தானில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் பெர்வேசு முசாரப் நவாசு செரீபை ஆட்சியில் இருந்து அகற்றி அரசுத்தலைவரானார்.
- 1999 – உலகின் மக்கள் தொகை 6 பில்லியனை எட்டியது.
- 2000 – ஏடனில் அமெரிக்காவின் கோல் கப்பல் இரண்டு தற்கொலைக் குண்டுகளால் சேதமடைந்தது. 17 மாலுமிகள் கொல்லப்பட்டனர், 39 பேர் உயிரிழந்தனர்.
- 2001 – அமைதிக்கான நோபல் பரிசு ஐ.நா. பொதுச் செயலர் கோபி அனானுக்கும் ஐக்கிய நாடுகளுக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டது.
- 2002 – பாலியில் இரவு விடுதி ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 202 பேர் கொல்லப்பட்டு 300 பேர் காயமடைந்தனர்.
- 2003 – பெலாரசில் மனநோய் வைத்தியசாலை ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் 30 மனநோயாளர் இறந்தனர்.
- 2005 – சீனாவின் இரண்டாவது மனித விண்வெளிப்பறப்பு விண்கலம் சென்சூ 6 இரண்டு வீரர்களுடன் ஏவப்பட்டது.
- 2017 – யுனெசுக்கோவில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதாக அறிவித்தது.[2] தொடர்ந்து இசுரேலும் வெளியேறியது.
பிறப்புகள்
- 1537 – ஆறாம் எட்வர்டு, இங்கிலாந்து மன்னர் (இ. 1553)
- 1798 – முதலாம் பேதுரு, பிரேசில் பேரரசர் (இ. 1834)
- 1811 – தாமஸ் சி. ஜெர்டன், பிரித்தானிய விலங்கியளாளர், தாவரவியளாளர், மருத்துவர் (இ. 1872)
- 1864 – காமினி ராய், வங்காளக் கவிஞர், சமூகப் பணியாளர் (இ. 1933)
- 1891 – இதித் ஸ்டைன், செருமானிய-யூத மெய்யியலாளர் (இ. 1942)
- 1891 – எஸ். வையாபுரிப்பிள்ளை, தமிழறிஞர், பதிப்பாளர் (இ. 1956)
- 1896 – எயுஜேனியோ மொண்டாலே, நோபல் பரிசு பெற்ற இத்தாலியக் கவிஞர் (இ. 1981)
- 1906 – முல்க் ராஜ் ஆனந்த், இந்திய புதின எழுத்தாளர் (இ. 2004)
- 1911 – விஜய் மேர்ச்சன்ட், இந்தியத் துடுப்பாளர் (இ. 1987)
- 1912 – நெ. து. சுந்தரவடிவேலு, தமிழகத் தமிழறிஞர், கல்வியாளர் (இ. 1993)
- 1913 – தம்பையா ஏகாம்பரம், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (இ. 1961)
- 1918 – மு. அ. சிதம்பரம், தமிழகத் தொழிலதிபர் (இ. 2000)
- 1918 – கே. கே. பிர்லா, இந்தியத் தொழிலதிபர் (இ. 2008)
- 1921 – ஆர்ட் குலொக்கி, களிமண்ணால் செய்யப்படும் இயங்குபடங்களின் முன்னோடி (இ. 2010)
- 1935 – சிவ்ராஜ் பாட்டீல், இந்திய அரசியல்வாதி
- 1935 – லூசியானோ பாவ்ராட்டி, இத்தாலியப் பாடகர், நடிகர் (இ. 2007)
- 1942 – எஸ். இராமச்சந்திரன், இலங்கையின் மலையக ஓவியர், சிற்பி, எழுத்தாளர் (இ. 2009)
- 1950 – சென் சூயி-பியான், தாய்வான் அரசியல்வாதி
- 1952 – யோசப் பொன்னையா, மட்டக்களப்பு ரோமன் கத்தோலிக்க மறைமாவட்டத்தின் ஆயர்
- 1968 – ஹியூ ஜேக்மன், ஆத்திரேலிய நடிகர், பாடகர்
- 1981 – சினேகா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை
- 1991 – அக்சரா ஹாசன், இந்தியத் திரைப்பட நடிகை
- 1992 – ஜோஷ் ஹட்சர்சன், அமெரிக்க நடிகர்
இறப்புகள்
- 1845 – எலிசபெத் ஃபிரை, ஆங்கிலேயத் தாதி, சமூக சேவகர் (பி. 1780)
- 1870 – ராபர்ட் ஈ. லீ, அமெரிக்க இராணுவத் தளபதி, பொறியியலாளர் (பி. 1807)
- 1914 – மார்கரெட் ஈ. நைட், அமெரிக்க கண்டுபிடிப்பாளர் (பி. 1838)
- 1946 – வெ. ப. சுப்பிரமணிய முதலியார், தமிழகக் கால்நடை மருத்துவர், நூலாசிரியர், கவிஞர் (பி. 1857)
- 1967 – ராம் மனோகர் லோகியா, இந்திய அரசியல்வாதி (பி. 1910)
- 1976 – ராணி சந்திரா, மலையாளத் திரைப்பட நடிகை (பி. 1949)
- 1979 – வி. மாணிக்கவாசகம், மலேசிய அரசியல்வாதி (பி. 1926)
- 1993 – வ. சுப்பையா, தமிழக விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (பி. 1911)
- 1997 – ஜான் டென்வர், அமெரிக்கப் பாடகர், நடிகர் (பி. 1943)
- 2011 – தென்னிசு இரிட்சி, சி நிரலாகக் மொழியைக் கண்டுபிடித்த அமெரிக்கர் (பி. 1941)
- 2013 – ஜார்ஜ் எர்பிக், அமெரிக்க வானியலாளர் (பி. 1920)
சிறப்பு நாள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
|