சூன் 12
சூன் 12 (June 12) கிரிகோரியன் ஆண்டின் 163 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 164 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 202 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- 1381 – உழவர் கிளர்ச்சி: இங்கிலாந்தில் கிளர்ச்சியாளர்கள் இலண்டன் வந்து சேர்ந்தனர்.
- 1429 – நூறாண்டுப் போர்: ஜோன் ஆஃப் ஆர்க் தலைமையில் பிரெஞ்சு இராணுவம் ஆங்கிலேயர்களிடம் இருந்து ஜார்கூ என்ற இடத்தைக் கைப்பற்றினர்.
- 1550 – பின்லாந்தில் எல்சிங்கி நகரம் (அப்போது சுவீடனில் இருந்தது) அமைக்கப்பட்டது.
- 1772 – நியூசிலாந்தில் பிரெஞ்சு நாடுகாண் பயணி மார்க்-யோசப் மரியன்டு பிரெசுனியும் அவரது 26 மாலுமிகளும் மாவோரிகளினால் கொல்லப்பட்டனர்.
- 1775 – அமெரிக்கப் புரட்சி: பிரித்தானிய இராணுவத் தளபதி தாமசு கேஜ் மசாசுசெட்சில் இராணுவச் சட்டத்தைப் பிறப்பித்தார். தமது ஆயுதங்களைக் கீழே வைக்கும் அனைத்துக் குடியேற்றக்காரர்களுக்கும் மன்னிப்பு அளிப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனாலும் சாமுவேல் ஆடம்ஸ், யோன் ஆன்கொக் ஆகியோருக்கு மன்னிப்பளிக்கப்படவில்லை.
- 1817 – ஆரம்பகால மிதிவண்டி, டான்டி குதிரை, கார்ல் வொன் டிராயிசு என்பவரால் இயக்கப்பட்டது.
- 1830 – 34,000 பிரெஞ்சுப் படைகள் அல்ஜீரியாவை அடைந்ததில் இருந்து பிரெஞ்சுக் குடியேற்றம் அந்நாட்டில் ஆரம்பமாகியது.
- 1898 – பிலிப்பீன்சு எசுப்பானியாவிடம் இருந்து விடுதலை பெற்றதாக எமிலியோ அகுயினால்டோ அறிவித்தார்.
- 1899 – ஐக்கிய அமெரிக்காவின் விஸ்கொன்சின் மாநிலத்தில் சுழல் காற்று தாக்கியதில் 117 பேர் உயிரிழந்தனர்.
- 1902 – ஆத்திரேலியாவின் நான்கு மாநிலங்களில் பெண்கள் பொதுத்தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். ஆஸ்திரேலியப் பழங்குடிகள் வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டது.
- 1914 – உதுமானியப் பேரரசில் துருக்கியர்கள் 50 முதல் 100 கிரேக்கர்களைப் படுகொலை செய்தனர். ஆயிரத்திற்கும் அதிகமானோரை இனக்கருவறுப்பு என்ற பெயரில் வெளியேற்றினர்.
- 1934 – பல்கேரியாவில் அரசியற் கட்சிகள் தடை செய்யப்பட்டன.
- 1935 – பொலிவியாவுக்கும் பராகுவேயிற்கும் இடையில் அமைதி உடன்பாடு எட்டப்பட்டு மூன்றாண்டுகள் போர் முடிவுக்கு வந்தது.
- 1940 – இரண்டாம் உலகப் போர்: 13,000 பிரித்தானிய, பிரெஞ்சுப் படைகள் பிரான்சில் நாட்சி செருமனியின் இராணுவத் தளபதி இர்வின் ரோமெல்லிடம் சரணடைந்தனர்.
- 1942 – ஆன் பிராங்க் தனது 13-வது அகவையில் ஒரு நாட்குறிப்பைப் பெற்றார்.
- 1943 – பெரும் இன அழிப்பு: செருமனியர் மேற்கு உக்ரைனில் 1,180 யூதர்களைப் படுகொலை செய்தனர்.
- 1944 – இரண்டாம் உலகப் போர்: ஓவர்லார்ட் நடவடிக்கை: அமெரிக்க வான்குடைப் பதாதிகள் பிரான்சின் கேரன்டான் நகரைக் கைப்பற்றினர்.
- 1954 – தனது 14-வது அகவையில் இறந்த தோமினிக் சாவியோவை திருத்தந்தை பன்னிரண்டாம் பயசு புனிதராக அறிவித்தார்.
- 1964 – இனவொதுக்கலுக்கு எதிராகக் குரல் கொடுத்தவரும், ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் தலைவருமான நெல்சன் மண்டேலாவுக்கு தென்னாபிரிக்க நீதிமன்றம் ஆயுள்கால சிறைத்தண்டனை விதித்தது.
- 1967 – கலப்பினத் திருமணங்களைத் தடை செய்யும் அனைத்து அமெரிக்க மாநிலங்களும் அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானவை என ஐக்கிய அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
- 1967 – சோவியத் ஒன்றியம் வெனேரா 4 விண்கலத்தை வெள்ளி கோளை நோக்கி ஏவியது. வேறொரு கோளின் வளிமண்டலத்துள் சென்று தகவல்களைப் பூமிக்கு அனுப்பிய முதலாவது விண்கலம் இதுவாகும்.
- 1987 – மத்திய ஆபிரிக்கக் குடியரசின் முன்னாள் பேரரசர் ஜீன்-பெடெல் பொக்காசாவுக்கு அவரது 13 ஆண்டுகால ஆட்சியில் இழைக்கப்பட்ட குற்றங்களுக்காக மரணதண்டனை விதிக்கப்பட்டது..
- 1990 – உருசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றம் சோவியத் ஒன்றியத்தில் இருந்து உருசியாவின் விடுதலையை முறைப்படி அறிவித்தது.
- 1991 – உருசியாவில் முதற்தடவையாக மக்கள் தேர்ந்தெடுத்த அரசுத்தலைவர் பதவியேற்றார்.
- 1991 – கொக்கட்டிச்சோலைப் படுகொலைகள், 1991: மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் 65 தமிழர்கள் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர்.
- 1993 – நைஜீரியாவில் தேர்தல் இடம்பெற்றது. ஆனால் இது பின்னர் இராணுவ அரசால் செல்லாமல் ஆக்கப்பட்டது.
- 1999 – நேட்டோ தலைமையிலான ஐநா அமைதிப் படை கொசோவோவினுள் நுழைந்தது.
- 2003 – "தமிழர் விடுதலை இயக்கம்" என்ற அமைப்புக்குத் தமிழக அரசு தடை விதித்தது.
- 2006 – காசுமீரில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் தொழிலாளர்கள் 8 பேர் கொல்லப்பட்டனர், 5 பேர் காயமடைந்தனர்.
- 2016 – அமெரிக்காவில் ஒர்லாண்டோவில் ஓரினச் சேர்க்கையாளரின் இரவுக் கூடலகம் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 49 பேர் கொல்லப்பட்டனர், 58 பேர் காயமடைந்தனர்.
- 2017 – வட கொரியாவில் 17 மாதங்கள் தங்கியிருந்த நிலையில் ஆழ்மயக்கத்தில் நாடு திரும்பிய அமெரிக்க மாணவர் ஒட்டோ வார்ம்பியர் ஒரு வாரத்தில் உயிரிழந்தார்.
பிறப்புகள்
- 1843 – டேவிட் கில், இசுக்கொட்டிய-ஆங்கிலேய வானியலாளர் (இ. 1914)
- 1895 – மார்சல் ஏ. நேசமணி, இந்திய அரசியல்வாதி (இ. 1968)
- 1906 – கே. ஏ. தாமோதர மேனன், கேரள எழுத்தாளர், அரசியல்வாதி (இ. 1980)
- 1912 – என். வி. நடராசன், தமிழக அரசியல்வாதி (இ. 1975)
- 1917 – அகுஸ்டோ ரொவ பாஸ்டோ, பரகுவை எழுத்தாளர் (இ. 2005)
- 1918 – சி. ஜே. எலியேசர், இலங்கை-ஆத்திரேலியக் கணிதவியலாளர் (இ. 2001)
- 1924 – ஜார்ஜ் எச். டபிள்யூ. புஷ், அமெரிக்காவின் 41வது அரசுத்தலைவர் (இ. 2018)
- 1925 – ஜி. ஏ. வடிவேலு, இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், பத்திரிகையாளர் (பி 2016)
- 1929 – ஆன் பிராங்க், செருமானிய-டச்சு நாட்குறிப்பாளர், பெரும் இனவழிப்பில் உயிரிழந்தவர் (இ. 1945)
- 1932 – பத்மினி, தென்னிந்தியத் திரைப்பட நடிகை (இ. 2006)
- 1937 – விளாதிமிர் ஆர்னோல்டு, உருசிய-பிரான்சிய கணிதவியலாளர் (இ. 2010)
- 1938 – கல்லாப்பெட்டி சிங்காரம், தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் (இ. 1990)
- 1942 – பேர்ற் சக்மன், நோபல் பரிசு பெற்ற செருமானிய உயிரியலாளர்
இறப்புகள்
- 1872 – தாமஸ் சி. ஜெர்டன், ஆங்கிலேய விலங்கியளாளர், தாவரவியளாளர், மருத்துவர் (பி. 1811)
- 1948 – சிபில் கார்த்திகேசு, இரண்டாம் உலகப் போரில் சப்பானியரை எதிர்த்துப் போராடிய மலேசியத் தமிழ்ப் பெண் (பி. 1899)
- 1972 – தினாநாத் கோபால் டெண்டுல்கர், இந்திய எழுத்தாளர், ஆவணப் படத் தயாரிப்பாளர் (பி. 1909)
- 2003 – கிரிகோரி பெக், அமெரிக்க நடிகர், அரசியல் செயற்பாட்டாளர் (பி. 1916)
- 2012 – எலினோர் ஒசுட்ரொம், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளியலாளர் (பி. 1933)
- 2014 – வாண்டுமாமா, தமிழக எழுத்தாளர் (பி. 1925)
- 2014 – கொடுக்காப்புளி செல்வராஜ், தென்னிந்திய நகைச்சுவை நடிகர்
சிறப்பு நாள்
வெளி இணைப்புகள்
|
|