கொக்கட்டிச்சோலைப் படுகொலைகள், 1991

கொக்கட்டிச்சோலைப் படுகொலைகள், 1991
கொக்கட்டிச்சோலைப் படுகொலைகளின் நினைவு மண்டபம் உள்ளூராட்சி மன்றத்தினால் 2006 ஆம் ஆண்டளவில் எழுப்பப்பட்டது.
கொக்கட்டிச்சோலைப் படுகொலைகள், 1991 is located in இலங்கை
கொக்கட்டிச்சோலைப் படுகொலைகள், 1991
இடம்கொக்கட்டிச்சோலை, இலங்கை
ஆள்கூறுகள்7°36′58″N 81°42′58″E / 7.61611°N 81.71611°E / 7.61611; 81.71611
நாள்யூன் 12, 1991 (+6 GMT)
தாக்குதலுக்கு
உள்ளானோர்
தமிழர்
தாக்குதல்
வகை
ஆயுதப் படுகொலை
ஆயுதம்இயந்திரத் துப்பாக்கிகள், கத்திகள், கோடாரிகள்
இறப்பு(கள்)152
தாக்கியோர்இலங்கை இராணுவம், முஸ்லிம் ஊர்காவல்படை[1]

1991 கொக்கட்டிச்சோலை படுகொலைகள் (Kokkadichcholai massacre) இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு நகருக்கு அருகில் உள்ள கொக்கட்டிச்சோலை என்ற ஊரில் தமிழ் மக்கள் மீது 1991 சூன் 12 அன்று நடத்தப்பட்டது. இதன் போது மொத்தம் 152 பொது மக்கள் கொல்லப்பட்டனர்.[2][3] இப்படுகொலைகளை விசாரணை செய்ய இலங்கை அரசு சனாதிபதி ஆணைக்குழு ஒன்றை நியமித்தது. படுகொலைகளை நடத்திய இராணுவத்தினரைக் கட்டுப்படுத்த கட்டளை அதிகாரி தவ்றி விட்டதாக ஆணைக்குழு கண்டறிந்தது. அவரைப் பதவியில் இருந்து அகற்றுமாறு ஆணைக்குழு பரிந்துரைத்தது. அத்துடன் படுகொலைகளில் ஈடுபட்ட இலங்கை இராணுவத்தினரில் 19 பேரை ஆணைக்குழு அடையாளம் கண்டது. கொழும்பில் நடத்தப்பட்ட இராணுவ விசாரணைகளில் இந்தப் 19 பேரும் குற்றவாளிகளாகக் கண்டறிந்த போதிலும், பின்னர் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.[4][5][6][7]

பின்னணித் தகவல்

மட்டக்களப்பு மாவட்டம் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ளது. இங்கு பெரும்பான்மையாக தமிழரும், சிறுபான்மை இனக்களாக சோனகர், சிங்களவர், பரங்கியர் ஆகியோர் வசிக்கின்றனர். 1980களின் ஆரம்பம் முதல் 1990களின் ஆரம்பம் வரை ஏறத்தாழ 1,100 பேர் வரை காணாமல் போயுள்ளனர். இவர்கள் கொலை செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது.[8] கொக்கட்டிச்சோலை கிராமம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியில் 1987, 1991 இல் நடந்த படுகொலைகள் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.[6]

மேற்கோள்

  1. "காத்தான்குடி பள்ளிவாசல் மீதான தாக்குதலை புலிகள் மேற்கொண்டார்களா? 26 வருடங்கள் கழித்து வெளிவரும் உண்மைகள் !!!!". Archived from the original on 2016-08-15. பார்க்கப்பட்ட நாள் 2022-02-12.
  2. McConnell, D. (2008). "The Tamil people's right to self-determination". Cambridge Review of International Affairs 21 (1): 59–76. doi:10.1080/09557570701828592. http://www.informaworld.com/index/790622093.pdf. பார்த்த நாள்: 2008-03-25. 
  3. "SRI LANKA:When will justice be done?". பன்னாட்டு மன்னிப்பு அவை. 2007. Archived from the original on 2007-07-14. பார்க்கப்பட்ட நாள் 2007-07-19.
  4. Disappearances and political crisis: Human Rights crisis of 1990s, A manual for action. பன்னாட்டு மன்னிப்பு அவை. 1994. pp. 16–22. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 90-6463-095-X.
  5. "2002 HRW report- Sri Lanka". மனித உரிமைகள் கண்காணிப்பகம். Archived from the original on 2007-02-14. பார்க்கப்பட்ட நாள் 2007-02-02.
  6. 6.0 6.1 Hoole, Rajan (2002-05-14). "Kokkadichcholai massacre and after". யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்களின் மனித உரிமைகள் அமைப்பு. பார்க்கப்பட்ட நாள் 2007-07-18.
  7. Pinto - Jayawardena, Kishali (1998-07-18). "Recognizing some valuable lessons:The Krishanthi case in retrospect". சண்டே டைம்சு. பார்க்கப்பட்ட நாள் 2007-07-18.
  8. Fernando, Basil (2002-08-30). "Graveyard for Disappeared Persons – Statistic for Batticaloa district". Asian Human Rights Commission. பார்க்கப்பட்ட நாள் 2002-07-18. [தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள்

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!