கினி அல்லது கினி குடியரசு என்பது மேற்கு ஆபிரிக்காவில் உள்ள ஒரு நாடாகும். இது கினி-பிசாவு, செனகல் என்பற்றை வடக்கிலும், மாலியை வடகிழக்கிலும், ஐவரி கோஸ்ட்டை தென் கிழக்கிலும் லிபியாவை தெற்கிலும், சியெரா லியானை மேற்கிலும் தனது எல்லைகளாக கொண்டுள்ளது. மேற்கில் அத்லாந்திக் சமுத்திரத்தை நோக்கியவாறு உள்ளது. இது நைஜர் நதி, செனகல் நதி, கம்பியா நதி என்பவற்றின் ஊற்றுப்பிரதேசங்களை கொண்டுள்ளது. இது ஒரு முன்னாள் பிரெஞ்சுக் குடியேற்ற நாடாகும். விடுதலைக்கு முன்னர் இது பிரெஞ்சு கினி என்று அழைக்கப்பட்டது. முன்னர் கினி என்பது சகாராவுக்கு தெற்கேயுள்ள ஆபிரிக்க மேற்குக் கரைக்கு வழங்கப்பட்ட பெயராகும். இது பெர்பிய மொழியில் "கருப்பர்களின் நிலம்" என்ற பொருள் கொண்ட பதத்தில் இருந்து வருவதாகும். 10.5 மில்லியமன் மக்கள் தொகை கொண்ட நாடான கினி 245,860 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவு கொண்டுள்ளது[1][2][3]