தாலிபான் அமைப்பின் தலைவர் முல்லா முகமது ஓமார் ஆவார். தாலிபானின் படைகளில் பெரும்பாலானோர் தெற்கு ஆப்கானிஸ்தானிலும், வடமேற்கு பாகிஸ்தானிலும் உள்ள பஷ்தூன் மக்கள் ஆவார். இவர்களைவிட சிறிய அளவில் ஐரோப்பா மற்றும் சீனாவைச் சேர்ந்த தீவிரவாதிகளும் இவ்வமைப்பில் உள்ளனர். தாலிபான் பாகிஸ்தான் அரசிடம் இருந்து இராணுவப் பயிற்சிகளையும் பெருமளவு இராணுவத் தளவாடங்களையும் பெற்றனர்.[1]பரணிடப்பட்டது 2008-02-22 at the வந்தவழி இயந்திரம்
பெண்கள் கல்விக்கு எதிர்ப்பாளர்களான இவர்கள் பெண்கள் படிக்கும் கல்லூரி, பள்ளிகளில் அமைந்துள்ள நீர்தொட்டியில் விசத்தைக் கலந்தும், பள்ளியின் வகுப்பறையில் விச வாயுவை தெளித்தும் பெண்கள் கல்வி கற்றலை அழிக்க முயற்சி செய்தார்கள்.[62]
1996 முதல் 2001 வரை முகமது ஓமார் தலைமையில் தாலிபான்கள் ஆப்கானித்தான் இசுலாமிய அமீரகத்தை ஆட்சி செய்தார்கள். 2001ஆம் ஆண்டில் அமெரிக்காவின் இரட்டை கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்த அமெரிக்க ராணுவம் இவர்களைப் பதவியிறக்கியது. அதைத் தொடர்ந்து 20 வருடங்கள் ஆப்கானித்தானில் வன்முறைகள் நடந்தது.
பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட தாலிபான் உயிரிழந்திருக்கிறார்கள். ஆனாலும் சமீபகாலமாக இந்தக் குழுவின் ஆதிக்கமும், ராணுவ பலமும் அதிகரித்திருக்கிறது. 2021ல் இவர்களின் மொத்த எண்ணிக்கை 70,000 முதல் 1 லட்சம் பேர் வரை. பத்து வருடங்களுக்கு முன்பு தாலிபானில் 30,000 பேர் மட்டுமே இருந்ததாக அமெரிக்கா கணித்திருந்தது. இந்த அளவுக்கு பிரம்மாண்டமான குழுவை வைத்துக்கொண்டு கிளர்ச்சி செய்வதற்கு ஆப்கானிஸ்தானுக்கு உள்ளிருந்தும் வெளியிலிருந்தும் இவர்களுக்கு நிதியுதவி வந்திருக்கிறது. குறிப்பாக பாகிஸ்தான் உள்ளிட்ட இசுலாமிய நாடுகளின் நன்கொடைகள், ஆப்கானில் விளையும் அபின் சுத்திகரிக்கப்பட்டு ஹெராயினாக மாற்றப்பட்டு 1.5 பில்லியன் முதல் 3 பில்லியன் டாலர் வரை ஏற்றுமதி வருமானம் மூலம் கிடைக்கிறது. அபின் வர்த்தகத்தைத் தாண்டியும், தாலிபான் கட்டுப்பாட்டில் இருக்கும் இடங்களில் வரிவிதிப்பு மூலம் நிதியுதவி பெறுகிறது.[63]
2020 முதல் தற்போது வரை தாலிபான்கள்
2020 தோகா ஒப்பந்தப்படி அமெரிக்கா மற்றும் நோட்டோ நாடுகளின் படைகள் 31 ஆகஸ்டு 2021 அன்று முழுவதுமாக வெளியேறிவிடுவதாகவும், அதுவரை படைவீரர்களுக்கும், வெளியேறுதல்களுக்கும், தாலிபான் உள்ளிட்ட பிற இயக்கங்கள் தீங்கு விளைவிக்கக்கூடாது என்று முடிவு எடுக்கப்பட்டது. அமெரிக்கா தனது துருப்புக்களை ஆப்கானிலிருந்து வெளியேறிக் கொண்டிருக்கும் நேரத்தில், 15 ஆகஸ்டு 2021 அன்று காபூலின் வீழ்ச்சிக்குப் பின்னர் தாலிபான் படைகள் காபூல் நகரத்தின் நிர்வாகத்தை கையில் எடுத்துக் கொண்டதுடன், நாட்டில் ஷரியா சட்டம் மீண்டும் கைப்பிடிக்கப்படும் என்றனர். இதனிடையில் ஆப்கான் அதிபர் அஷ்ரப் கனி 14 ஆகஸ்டு 2021 அன்று ஆப்கானை விட்டு வெளியேறினார். ஆப்கான் துணி அதிபர் அம்ருல்லா சலே தனது சொந்தப் பகுதியான பாஞ்சிரி பள்ளத்தாக்கிற்கு சென்றார்.
தாலிபான்களுக்கு எதிராக செயல்பட்ட அர்சு ஊழியர்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகள் மற்றும் படைவீரரகளுக்கு தாலிபான்கள் பொது மன்னிப்பு வழங்கி, அவர்கள் துன்புறுத்த மாட்டார்கள் என வாக்களித்தனர். ஆப்கானிய அறிவு ஜீவிகள் மட்டும் ஆப்கானிலேயே தங்க வேண்டும் என தாலிபான்கள் பொது மக்களை கேட்டுக் கொண்டனர். இருப்பினும் 16 ஆகஸ்டு 2021 முதல் காபூல் நகரத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்த இந்தியா உள்ளிட்ட மேற்குலக நாடுகளின் தூதரக அதிகாரிகள், ஊழியர்கள், தூதரகத்தில் வேலைபார்த்த ஆப்கானியர்கள் தங்கள் குடும்பத்துடன் வானூர்திகளில் ஏறி மேற்குலக நாடுகளுக்குச் சென்றனர். இதனிடையே ஹமித் கர்சாய் பன்னாட்டு வானூர்தி நிலையத்தின் நுழைவாயில் அருகே அடுத்தடுத்து இரண்டு தற்கொலை குண்டு வெடிப்புகள் நடைபெற்றது. இந்த குண்டு வெடிப்புகளுக்கு இசுலாமிய அரசு, கொராசான் பெறுப்பு ஏற்றது.[64] குண்டு வெடிப்பில் 68க்கும் மேற்பட்ட ஆப்கானியர்களும், 13 அமெரிக்கத் துருப்புகளும், 2 பிரித்தானிய துருப்புகளும் கொல்லப்பட்ட்டனர்.[65]
↑Whine, Michael (1 September 2001). "Islamism and Totalitarianism: Similarities and Differences". Totalitarian Movements and Political Religions2 (2): 54–72. doi:10.1080/714005450.
↑'The Taliban'. Mapping Militant Organizations. Stanford University. Updated 15 July 2016. Retrieved 24 September 2017.
↑Gall, Carlotta (26 March 2009). "Pakistan and Afghan Taliban Close Ranks". த நியூயார்க் டைம்ஸ். Islamabad, Pakistan. பார்க்கப்பட்ட நாள் 14 December 2020. The Afghan Taliban delegation urged the Pakistani Taliban leaders to settle their internal differences, scale down their activities in Pakistan and help counter the planned increase of American forces in Afghanistan, the fighters said.
↑Zahid, Farhan (15 April 2019). "Profile of New TTP Chief Mufti Noor Wali Mehsud: Challenges and Implications"(PDF). pakpips.com. Islamabad, Pakistan: Pak Institute for Peace Studies. p. 4. பார்க்கப்பட்ட நாள் 14 December 2020. According to Mehsud, the real jihad is against US forces in occupied Afghanistan to restore the Islamic Emirate while using tribal areas of Pakistan as base of operations and safe haven for both Taliban and Al-Qaeda. He further explains the goals and aims of the jihadi movement as: maintaining the independent status for Mehsud tribe, defeating the US in Afghanistan, establishing caliphate in Afghanistan
↑"Why Central Asian states want peace with the Taliban". DW News. 27 March 2018. "Taliban have assured Russia and Central Asian countries that it would not allow any group, including the IMU, to use Afghan soil against any foreign state," Muzhdah said.
↑Ibrahimi, Niamatullah. 2009. "Divide and Rule: State Penetration in Hazarajat (Afghanistan) from Monarchy to the Taliban", Crisis States Working Papers (Series 2) 42, London: Crisis States Research Centre, London School of Economics