இசுலாமிய அரசு, கொராசான் (Islamic State of Iraq and the Levant – Khorasan Province (ISIL–KP or ISKP; அரபு மொழி: الدولة الإسلامية في العراق والشام – ولاية خراسان, romanized: ad-Dawlah al-Islāmiyah fī 'l-ʿIrāq wa-sh-Shām – Wilayah Khorasan)[1]சிரியா மற்றும் ஈராக்கில் செயல்பட்ட இசுலாமிய அரசின் தீவிரவாத அமைப்பு போன்று தெற்காசியா மற்றும் நடு ஆசியாவின் பகுதிகளில் செயல்படும் இசுலாமிய அரசு, கொராசான் என தன்னிச்சையாக அறிவித்துக் கொண்ட ஒரு இசுலாமிய அடிப்படைவாதம் கொண்ட தீவிரவாத அமைப்பாகும்.[2] தங்கள் அமைப்பிற்கும், கொராசான் இசுலாமிய அரசுக்கும் எந்தத் தொடர்புகள் இல்லை என அறிவித்துள்ளது.[3][4][5][6][7][8][9][10][11][12]
கொராசான் இசுலாமிய அரசு 26 சனவரி 2015-இல் நிறுவப்பட்டது. பாக்கித்தானின் தெகரிக்கு-இ-தாலிபான் தலைவராக இருந்த ஹபீஸ் சயீத் கானும், துணைத் தலைவராக முன்னாள் தாலிபான் தலைவர் அப்துல் ரவூப் அலிசாவும் இருந்தனர். அலிசா அமெரிக்காவின் ஆள்-இல்லா போர் விமானத்தால் 2015-இல் கொல்லப்பட்டார்.[13] while Khan was killed in a U.S. airstrike in July 2016.[14] கொராசான் இசுலாமிய அரசின் தலைவர் அப்துல்லா ஒரோக்சாய் என்ற அஸ்லாம் பரூக்கி ஏப்ரல் 2020-இல் ஆப்கான் அரசுப்படையினரால் கொல்லப்பட்டார். [15][16] இந்த இயக்கம் ஆப்கானித்தான், தஜிகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நாடுகளில் செயல்படுகிறது. இந்த இயக்கத்தின் பயங்கரவாதிகள் ஆப்கானித்தானில் மட்டும் 10,000 பேர் வரை செயல்படுவதாக் ருசியா குறிப்பிட்டுள்ளது.
காபூல் வானூர்தி நிலையத்தின் நுழைவாயிலின் அருகே 26 ஆகஸ்டு 2021 அன்று மாலையில் நடைபெற்ற இரண்டு குண்டு வெடிப்புகளுக்கு கொராசான் இசுலாமிய அரசு தீவிரவாத இயக்கம் பெறுப்பேற்றுள்ளது. இந்த இரண்டு குண்டு வெடிப்பில் 20 தாலிபான்கள், 16 அமெரிக்கத் துருப்புகள் மற்றும் 62 ஆப்கான் பொதுமக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 200 பேர் காயமடைந்தனர்.[17][18]