தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (Tamil National Alliance , TNA) என்பது இலங்கையின் தமிழ் அரசியல் கட்சிகளின் கூட்டணியாகும். இது இலங்கைத் தமிழ் சிறுபான்மையின மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இக்கூட்டணி மிதவாதத் தமிழ்த் தேசியக் கட்சிகளும் முன்னாள் போராளி இயக்கங்கள் சிலவும் இணைந்து 2001 அக்டோபரில் அமைக்கப்பட்டது. இந்த கூட்டணி ஆரம்பத்தில் இலங்கைத் தீவின் தமிழர்களுக்கு தமிழீழம் என்ற ஒரு தன்னாட்சி மாநிலத்தில் சுயநிர்ணயத்தை ஆதரித்தது. இலங்கையில் உள்நாட்டுப் போரைத் தீர்க்க ஆயுதப் போரில் ஈடுபட்ட விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தைகளை அது ஆதரித்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுதலைப் புலிகளின் அரசியல் பிரதிநிதிகளாக பெரும்பான்மையினரின் மத்தியில் கருதப்பட்டாலும், அதன் தலைமை ஒருபோதும் தாம் புலிகளை ஆதரிக்கவில்லை எனவும், அரசாங்கத்தைப் போலவே புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் தெரிவித்து வந்தது.[ 1] [ 2] [ 3] [ 4] [ 5]
2009 இல் உள்நாட்டுப் போர் முடிவடைந்து, விடுதலைப் புலிகள் போரில் தோல்வியடைந்ததை அடுத்து, தமிழ்த் தேசியக் கூடமைப்பு தனியரசுக்கான கோரிக்கையைக் கைவிட்டு, பிராந்திய சுயாட்சியை ஏற்கத் தயாராக இருப்பதாக அறிவித்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களும் அதன் ஆதரவாளர்களும் ஏராளமான தாக்குதல்களுக்கு உள்ளாகினர், அதன் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் கி. சிவநேசன் , ஜோசப் பரராஜசிங்கம் , நடராஜா ரவிராஜ் அரசு ஆதரவுக் குழுக்களால் கொல்லப்பட்டனர்.[ 6] [ 7] [ 8]
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தற்போது இலங்கைத் தமிழரசுக் கட்சி , தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் , தமிழீழ விடுதலை இயக்கம் ஆகிய மூன்று கட்சிகள் அங்கம் வகிக்கின்றன.[ 9] இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்போது 10 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. அத்துடன் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 33 உள்ளூராட்சி சபைகளையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. கூட்டமைப்பின் தலைவராக இரா. சம்பந்தன் உள்ளார். இவர் செப்டம்பர் 2015 முதல் 2018 திசம்பர் வரை எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்துள்ளார்.[ 10] [ 11]
வரலாறு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 2001 அக்டோபரில் 2001 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒரு பொதுக் குடையின் கீழ் போட்டியிடுவதற்காக உருவாக்கப்பட்டது.[ 12] 2001 அக்டோபர் 20 இல் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் (அ.இ.த.கா), ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஈபிஆர்எல்எஃப்), தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ), தமிழர் விடுதலைக் கூட்டணி (தவிகூ) ஆகிய கட்சிகளிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.[ 13] இக்கூட்டமைப்பு அரசியல் கட்சியாகப் பதிவு செய்யப்படாததால், 2001 தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு மொத்தாம் 348,164 வாக்குகள் (3.89%) பெற்று நாடாளுமன்றத்தில் 225 இல் 15 இடங்களைக் கைப்பற்றியது.[ 14]
த.தே.கூ உருவாக்கப்பட்ட காலத்தில் இருந்து அது விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து வந்தது. புலிகளின் "விடுதலைப் போராட்டத்தை" அங்கீகரித்து, அவர்களே இலங்கைத் தமிழரின் ஏகோபித்த பிரதிநிதிகள் என அறிவித்தது.[ 15] இது அக்கூட்டமைப்புக்குள்ளே பிளவுகளை ஏற்படுத்தியது. வீ. ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியின் உறுப்பினர்கள் சிலர் புலிகளுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தனர். இதனால், 2004 தேர்தலில் தமது சின்னத்தைப் பயன்படுத்த அனந்தசங்கரி நீதிமன்றத்தில் இருந்து தடை உத்தரவு பெற்றார்.[ 16] இதனால், கூட்டமைப்பில் இருந்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் சில உறுப்பினர்கள் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தை மீளக் கொண்டு வந்தார்கள்.[ 17] 2004 தேர்தலில், கூட்டமைப்பு வீட்டுச் சின்னத்தில் போட்டியிட்டு, 633,654 வாக்குகளைப் (6.84%) பெற்று 22 இடங்களைக் கைப்பற்றியது.[ 18]
மட்டக்களப்பு மாவட்டத்தில் 2008 இல் இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தல்களிலும், 2008 கிழக்கு மாகாணசபைத் தேர்தலிலும் அரசு-சார்பு தமவிபு துணை இராணுவக் குழுவின் அச்சுறுத்தலினால் கூட்டமைப்பு போட்டியிடவில்லை.[ 19] [ 20] [ 21] [ 22]
2009 மே மாதத்தில் ஈழப்போர் முடிவுக்கு வந்தது.[ 23] 40,000 இற்கும் அதிகமான பொதுமக்கள் இறுதிப் போரில் ஆயுதப் படைகளினால் கொல்லப்பட்டனர்.[ 24] [ 25] [ 26] தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இறுதிப் போரில் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்களுக்கு பன்னாட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் என உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் குரல் கொடுத்து வந்தது.[ 27] [ 28] [ 29]
2010 அரசுத்தலைவர் தேர்தலில் கூட்டமைப்பு பொது எதிர்க்கட்சி வேட்பாளரான சரத் பொன்சேகாவை ஆதரித்தது.[ 30] 2010 மார்ச்சில், கூட்டமைப்பு தனிநாடு என்ற தனது கோரிக்கையைக் கைவிட்டு, வடக்கு , கிழக்கு மாகானங்களின் இணைப்புடனான கூட்டாட்சிக் கோரிக்கையை முன்வைத்தது.[ 31] [ 32] 2010 மார்ச்சில், தமிழ்க் காங்கிரஸ் தன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் , மற்றும் செல்வராசா கஜேந்திரன் , பத்மினி சிதம்பரநாதன் ஆகியோருடன் கூட்டமைப்பில் இருந்து வெளியேறி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்ற கூட்டணியை உருவாக்கினர்.[ 33] [ 34] 2010 நாடாளுமன்ரத் தேர்தலில் கூட்டமைப்பு 233,190 வாக்குகளைப் (2.90%) பெற்று 14 இடங்களை மட்டும் கைப்பற்றியது.[ 35]
2013 மாகாணசபைத் தேர்தல்களில் வட மாகாணத்தில் கூட்டமைப்பு 80% வாக்குகளைப் பெற்று, 38 இடங்களில் 30 இடங்களை எடுத்து வட மாகாண சபையைக் கைப்பற்றியது.[ 36] [ 37] [ 38] கூட்டமைப்பின் க. வி. விக்னேஸ்வரன் வடமாகாணத்தின் முதலாவது முடஹ்லமைச்சரானார் .[ 39] [ 40] [ 41]
2015 அரசுத்தலைவர் தேர்தலில் கூட்டமைப்பு பொது எதிர்க்கட்சி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்தது.[ 42] [ 43] தேர்தலில் சிறிசேன வெற்றி பெற்றார். ஆனாலும், அவரது அரசில் கூட்டமைப்பு பங்குபற்றவில்லை.[ 44] [ 45] [ 46]
2015 மார்ச்சில், கிழக்கு மாகாண சபையில் முசுலிம் காங்கிரசுடன் இணைந்து ஆட்சி அமைத்தது.[ 47] [ 48] [ 49] இரண்டு கூட்டமைப்பு உறுப்பினர்கள் மாகாண அமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர்.[ 50] [ 51]
2015 நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டமைப்பு 515,963 வாக்குகளைப் (4.62%) பெற்று 16 இடங்களைக் கைப்பற்றியது.[ 52] [ 53] ஆர். சம்பந்தன் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவரானார் .[ 54] [ 55]
கூட்டமைப்பில் உள்ள கட்சிகள்
2020 நிலவரப்படி பின்வரும் கட்சிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றன:
இலங்கைத் தமிழரசுக் கட்சி
தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ)
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்)
தேர்தல் வரலாறு
இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்கள்
ஆண்டு
வாக்குகள்
வாக்கு %
வென்ற இடங்கள்
+/–
2001
348,164
3.89%
15
2004
633,654
6.84%
7
2010
233,190
2.90%
▼ 8
2015
515,963
4.62%
2
2020
327,168
2.82%
▼ 6
நாடாளுமன்றத் தேர்தல்கள்
2001 நாடாளுமன்றத் தேர்தல்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு , முதற் தடவையாக 5 டிசம்பர் 2001 தேர்தலில் போட்டியிட்டது. இரா. சம்பந்தன் தலைமையில் 3.88% வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்தின் மொத்தமுள்ள 225 இடங்களில் 15 இடங்களைக் கைப்பற்றியது.
தேர்தல் மாவட்டங்கள் வாரியாக ததேகூ வென்ற வாக்குகளும், இடங்களும்:
தேர்தல் மாவட்டம்
வாக்குகள்
%
இடங்கள்
செலுத்தப்பட்ட மொத்த வாக்குவீதம்
ததேகூ உறுப்பினர்கள்
அம்பாறை
48,789
17.41%
1
82.51%
அரியநாயகம் சந்திரநேரு (தவிகூ )
மட்டக்களப்பு
86,284
48.17%
3
68.20%
ஜி. கிருஷ்ணபிள்ளை (தகா )யோசப் பரராஜசிங்கம் (தவிகூ ) தம்பிராஜா தங்கவடிவேல் (டெலோ )
கொழும்பு
12,696
1.20%
0
76.31%
யாழ்ப்பாணம்
102,324
54.84%
6
31.14%
வீரசிங்கம் ஆனந்தசங்கரி (தவிகூ )கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (தகா )நடராஜா ரவிராஜ் (தவிகூ )மாவை சேனாதிராஜா (தவிகூ )எம். கே. சிவாஜிலிங்கம் (டெலோ )அ. விநாயகமூர்த்தி (தகா )
திருகோணமலை
56,121
34.83%
1
79.88%
இரா. சம்பந்தன் (தவிகூ )
வன்னி
41,950
44.39%
3
46.77%
செல்வம் அடைக்கலநாதன் (டெலோ )சிவசக்தி ஆனந்தன் (ஈபிஆர்எல்எஃப் ) இராசா குகனேசுவரன் (டெலோ )
தேசியப் பட்டியல்
1
மு. சிவசிதம்பரம் (தவிகூ ), 2002 சூன் 5 இல் காலமானார். இவருக்குப் பதிலாக க. துரைரத்தினசிங்கம் (தவிகூ ) தேர்ந்தெடுக்கப்பட்டார்.)
மொத்தம்
348,164
3.88%
15
76.03%
மூலம்:"Parliamentary General Election 2001, Final District Results" . இலங்கைத் தேர்தல் திணைக்களம்.
2004 நாடாளுமன்றத் தேர்தல்
2004 ஏப்ரல் 2 இல் இடம்பெற்ற தேர்தல்களில் சந்திரிக்கா குமாரதுங்க தலைமையில் ஐக்கிய மக்கள் விடுதலைக் கூட்டணி வெற்றி பெற்றது. இரா. சம்பந்தன் தலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 6.84% வாக்குகளைப் பெற்று, 22 இடங்களைக் கைப்பற்றியது.
ததேகூ வென்ற தேர்தல் மாவட்டங்கள்
தேர்தல் மாவட்டம்
வாக்குகள்
%
இடங்கள்
செலுத்தப்பட்ட மொத்த வாக்குவீதம்
ததேகூ நாஉ
அம்பாறை
55,533
19.13%
1
81.42%
க. பத்மநாதன் , இறப்பு 21 மே 2009தோமஸ் தங்கதுரை வில்லியம் , 12 சூன் 2009 இலிருந்து
மட்டக்களப்பு
161,011
66.71%
4
83.58%
சேனாதிராஜா ஜெயானந்தமூர்த்தி த. கனகசபை தங்கேஸ்வரி கதிராமன் கிங்க்ஸ்லி ராசநாயகம், ஏப்ரல் 2004 இல் பதவி துறப்புபா. அரியநேத்திரன் , 18 மே 2004 இலிருந்து
யாழ்ப்பாணம்
257,320
90.60%
8
47.38%
செல்வராஜா கஜேந்திரன் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (அஇதகா )சுரேஷ் பிரேமச்சந்திரன் (ஈபிஆர்எல்எஃப் )நடராஜா ரவிராஜ் (இதக ), 10 நவம்பர் 2006 இல் படுகொலைமாவை சேனாதிராஜா (இதக )எம். கே. சிவாஜிலிங்கம் (ரெலோ )கி. சிவநேசன் , 6 மார்ச் 2008 இல் படுகொலைபத்மினி சிதம்பரநாதன் நல்லதம்பி சிறீகாந்தா (ரெலோ ), 30 நவம்பர் 2006 இலிருந்துசொலமன் சிரில் , 9 ஏப்ரல் 2008 இலிருந்து
திருகோணமலை
68,955
37.72%
2
85.44%
இரா. சம்பந்தன் (இதக )க. துரைரத்தினசிங்கம் (இதக )
வன்னி
90,835
64.71%
5
66.64%
செல்வம் அடைக்கலநாதன் (ரெலோ )சிவசக்தி ஆனந்தன் (ஈபிஆர்எல்எஃப் )சதாசிவம் கனகரத்தினம் சிவநாதன் கிசோர் வினோ நோகராதலிங்கம் (ரெலோ )
தேசியப் பட்டியல்
2
எம். கே. ஈழவேந்தன் , நாடாளுமன்றத்திற்கு சமூகமளிக்காததால் 14 டிசம்பர் 2007 இல் வெளியேற்றப்பட்டார்ஜோசப் பரராஜசிங்கம் (இதக ), 24 டிசம்பர் 2005 இல் படுகொலைசந்திர நேரு சந்திரகாந்தன் , 27 செப்டம்பர் 2006 முதல்ரசீன் முகம்மது இமாம் , 5 பெப்ரவரி 2008 முதல்)
மொத்தம்
633,654
6.84%
22
75.96%
Source:"Parliamentary General Election 2004, Final District Results" . Department of Elections, Sri Lanka.
2010 நாடாளுமன்றத் தேர்தல்
2010 ஏப்ரல் 8 இல் இடம்பெற்ற தேர்தல்களில் மகிந்த ராசபக்ச தலைமையில் ஐக்கிய மக்கள் விடுதலைக் கூட்டணி வெற்றி பெற்றது. இரா. சம்பந்தன் தலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 2.9% வாக்குகளைப் பெற்று, 14 இடங்களைக் கைப்பற்றியது.
ததேகூ வென்ற தேர்தல் மாவட்டங்கள்
2015 நாடாளுமன்றத் தேர்தல்
2015 ஆகத்து 17 இல் இடம்பெற்ற தேர்தல்களில் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி வெற்றி பெற்றது. இரா. சம்பந்தன் தலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 4.62% வாக்குகளைப் பெற்று, இரண்டு தேசியப் பட்டியல் உறுப்பினர்கள் உட்பட மொத்தம் 16 இடங்களைக் கைப்பற்றி நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக வந்தது. முக்கிய கட்சிகளான நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி (ஐமசுகூ) ஆகியன முறையே 106, 95 இடங்களைக் கைப்பற்றியிருந்தன. ஐதேக ஆட்சியமைப்பதற்குத் தேவையான அறுதிப் பெரும்பான்மை கிடைக்காததால், இரண்டு முக்கிய கட்சிகளும் இணைந்து தேசிய அரசாங்கம் ஒன்றை அமைத்தன. இதனால் 16 இடங்களைக் கைப்பற்றி மூன்றாவது இடத்தில் இருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் 2015 செப்டம்பர் 3 இல் எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[ 56] [ 57] [ 58] [ 59]
ததேகூ வென்ற தேர்தல் மாவட்டங்கள்
மாகாணசபைத் தேர்தல்கள்
2008 கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்குபற்றவில்லை. 2013 இல் நடைபெற்ற 1வது வட மாகாண சபைத் தேர்தலில் கூட்டமைப்பு வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது.
2012 கிழக்கு மாகாணசபைத் தேர்தல்
2012 கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிட்டு மொத்தமுள்ள 37 இடங்களில் 11 இடங்களைக் கைப்பற்றியது.[ 60]
தேர்தல் மாவட்டம்
வாக்குகள்
%
இடங்கள்
செலுத்தப்பட்ட மொத்த வாக்குவீதம்
ததேகூ மாகாணசபை உறுப்பினர்கள்
அம்பாறை
44,749
16.28%
2
66.10%
இராஜேசுவரன் முருகேசு, தவராசா கலையரசன்
மட்டக்களப்பு
104,682
50.83%
6
64.29%
ராசையா துரைரத்தினம், கிருஷ்ணபிள்ளை துரைராஜசிங்கம் , கோவிந்தன் கருணாகரம், மார்க்கண்டு நடராசா, இந்திரகுமார் நித்தியானந்தம், ஞானமுத்து கிருஷ்ணபிள்ளை
திருகோணமலை
44,396
29.08%
3
66.83%
சிங்காரவேலு தண்டாயுதபாணி , குமாரசாமி நாகேசுவரன், ஜெகதீசன் ஜெனார்த்தனன்
தேசியப் பட்டியல்
0
மொத்தம்
193,827
30.59%
11
61.26%
2013 வடக்கு மாகாணசபைத் தேர்தல்
2013 செப்டம்பர் 21 இல் நடைபெற்ற வட மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிட்டு மொத்தமுள்ள 38 இடங்களில் 30 இடங்களைக் கைப்பற்றி அறுதிப் பெரும்பான்மையைப் பெற்று 1வது வட மாகாண சபையின் ஆட்சியைக் கைப்பற்றியது.[ 61]
தேர்தல் மாவட்டம்
வாக்குகள்
%
இடங்கள்
செலுத்தப்பட்ட மொத்த வாக்குவீதம்
ததேகூ மாகாணசபை உறுப்பினர்கள்
யாழ்ப்பாணம்
213,907
84.37%
14
64.15%
க. வி. விக்னேஸ்வரன் , அனந்தி சசிதரன் , தர்மலிங்கம் சித்தார்த்தன் , இம்மானுவேல் ஆனல்ட், சி. வி. கே. சிவஞானம் , பா. கஜதீபன் , எம். கே. சிவாஜிலிங்கம் , பொ. ஐங்கரநேசன் , ச. சுகிர்தன், கே. சயந்தன், விந்தன் கனகரத்தினம், அரியகுட்டி பரஞ்சோதி, ஆ. க. சர்வேஸ்வரன், வே. சிவயோகன்
கிளிநொச்சி
37,079
81.57%
3
73.17%
பசுபதி அரியரத்தினம், தம்பிராசா குருகுலராசா , சுப்பிரமணியம் பசுபதிப்பிள்ளை
மன்னார்
33,118
62.22%
3
74.22%
பிரிமூஸ் சிராய்வா, பாலசுப்பிரமணியம் டெனிஸ் , ஜி. குணசீலன்
வவுனியா
41,225
66.10%
4
72.28%
ப. சத்தியலிங்கம் , க. தா. லிங்கநாதன் , ம. தியாகராஜா, ஆர். இந்திரராசா
முல்லைத்தீவு
28,266
78.56%
4
70.56%
அன்டனி ஜெயநாதன் , சிவப்பிரகாசம் சிவயோகன், துரைராஜா ரவிகரன், கனகசுந்தரம்சுவாமி வீரவாகு
கூடுதல் இடங்கள்
2
அஸ்மின் அயூப் (மன்னார்), மேரி கமலா குணசீலன் (முல்லைத்தீவு)
மொத்தம்
353,595
78.48%
30
67.52%
மேற்கோள்கள்
↑ Sri Lankan Tamils drop demand for separate independent homeland
↑ BBC Tamil party wins elections in Sri Lanka's ex-war zone
↑ Robert C Oberst; Yogendra K Malik; Charles Kennedy; Ashok Kapur; Mahendra Lawoti, Syedur Rahman & Ahrar Ahmad (9 July 2013). Government and Politics in South Asia . Avalon Publishing. pp. 255–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8133-4880-3 . பார்க்கப்பட்ட நாள் 30 July 2017 .
↑ Randolph Kluver (2007). The Internet and National Elections: A Comparative Study of Web Campaigning . Taylor & Francis. pp. 124–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-415-44618-1 . பார்க்கப்பட்ட நாள் 30 July 2017 .
↑ "சிங்கள ஊடகத்திற்கு" . https://www.virakesari.lk/article/81831 .
↑ டி. பி. எஸ். ஜெயராஜ் (16 March 2008). "Assassinating Tamil Parliamentarians: The unceasing waves" . The Nation இம் மூலத்தில் இருந்து 20 பிப்ரவரி 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140220083850/http://www.nation.lk/2008/03/16/newsfe1.htm .
↑ Sambandan, V. S. (10 February 2005). "Tamil National Force claims responsibility for Kousalyan's murder" . தி இந்து இம் மூலத்தில் இருந்து 5 மார்ச் 2005 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20050305184339/http://www.hindu.com/2005/02/11/stories/2005021114741500.htm .
↑ Tamils give up on independence . 14 March 2010. Al Jazeera.
↑ Ferdinando, Shamindra (9 March 2015). "President to solicit British support for reconciliation" . தி ஐலண்டு (இலங்கை) இம் மூலத்தில் இருந்து 4 மார்ச் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304093014/http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=121005 .
↑ "TNA’s Sampanthan becomes opposition leader in Sri Lankan parliament" (in en-IN). The Hindu . 2015-09-03. http://www.thehindu.com/news/international/sri-lankan-parliament-recognises-tamil-national-alliances-r-sampanthan-as-opposition-leader/article7611560.ece .
↑ "MR appointed as Opposition Leader" . Daily Mirror. December 18, 2018. http://www.dailymirror.lk/article/MR-appointed-as-Opposition-Leader--159936.html . பார்த்த நாள்: 11 February 2019 .
↑ "Tamil parties campaign in rebel areas" . BBC News . 20 November 2001. http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/1666893.stm .
↑ "Tamil parties sign MOU" . தமிழ்நெட் . 20 October 2001. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=6400 .
↑ "Parliamentary General Election 2001, All Island Result" . Department of Elections, Sri Lanka. Archived from the original on 2009-01-07.
↑ ""Tamil parties' alliance formed to support liberation struggle"-TULF" . தமிழ்நெட் . 28 October 2001. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=6422 .
↑ "Objection against TNA using HOUSE symbol rejected" . தமிழ்நெட் . 28 February 2004. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=11340 . பார்த்த நாள்: 28 February 2010 .
↑ D. B. S. Jeyaraj (18 May 2013). "Tamil National Alliance Faces Acute Political Crisis" . டெய்லி மிரர் . http://www.dailymirror.lk/29624/tamil-national-alliance-faces-acute-political-crisis .
↑ "Parliamentary General Election 2004, All Island Result" . Department of Elections, Sri Lanka. Archived from the original on 2012-12-19.
↑ "TNA to boycott Batticaloa local polls" . தமிழ்நெட் . 23 January 2008. http://www.tamilnet.com/art.html?artid=24390&catid=13 .
↑ "Ex-rebels win key Sri Lankan election" . USA Today . அசோசியேட்டட் பிரெசு . 10 March 2008. http://usatoday30.usatoday.com/news/world/2008-03-10-sri-lanka-election_N.htm .
↑ "Eastern PC election, another step in Sinhalasisation of East - TNA" . தமிழ்நெட் . 2 April 2008. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=25175 .
↑ "TNA to boycott eastern PC polls" . பிபிசி Sinhala . 23 March 2008. http://www.bbc.co.uk/sinhala/news/story/2008/03/080323_tna_elections.shtml .
↑ Hull, C. Bryson; Sirilal, Ranga (18 May 2009). "Fighting ends, rebel leader Prabhakaran dead" . Die Welt . https://www.welt.de/english-news/article3758496/Fighting-ends-rebel-leader-Prabhakaran-dead.html .
↑ Aneez, Shihar; Sirilal, Ranga (7 April 2014). "Sri Lanka won't cooperate U.N. war crime probe: foreign minister" . ராய்ட்டர்ஸ் இம் மூலத்தில் இருந்து 10 அக்டோபர் 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151010133342/http://www.reuters.com/article/2014/04/07/us-sri-lanka-un-rights-idUSBREA3616520140407 .
↑ Lynch, Colum (22 April 2011). "U.N.: Sri Lanka’s crushing of Tamil Tigers may have killed 40,000 civilians" . தி வாசிங்டன் போஸ்ட் . https://www.washingtonpost.com/world/un-sri-lankas-crushing-of-tamil-tigers-may-have-killed-40000-civilians/2011/04/21/AFU14hJE_story.html .
↑ "UN: Sri Lanka mass deaths may be 'war crimes'" . அல் ஜசீரா . 25 April 2011. http://english.aljazeera.net/news/asia/2011/04/2011425214422583975.html .
↑ Radhakrishnan, Rahul (26 March 2014). "UN considers probe into Sri Lanka atrocities" . அல் ஜசீரா . http://www.aljazeera.com/news/asia/2014/03/un-considers-probe-into-sri-lanka-atrocities-201432675258598751.html .
↑ D. B. S. Jeyaraj (15 March 2014). "TNA’s Call For An International Probe Into abuses by "Both Sides"" . Daily Mirror . http://www.dailymirror.lk/44505/tnas-call-for-an-international-probe-into-abuses-by-both-sides .
↑ "Sri Lanka's Tamil party rejects domestic probe into war allegations" . Shanghai Daily . 29 January 2015. http://www.shanghaidaily.com/article/article_xinhua.aspx?id=265897 .
↑ "Tamil group backs former general" . Tamil National Alliance . 6 January 2010. http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/8444055.stm .
↑ Haviland, Charles (13 March 2010). "Sri Lanka Tamil party drops statehood demand" . பிபிசி . http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/8566114.stm .
↑ "Tamils give up on independence" . அல் ஜசீரா . 13 Mar 2010. http://www.aljazeera.com/news/asia/2010/03/2010313215127841206.html .
↑ D. B. S. Jeyaraj (17 April 2010). "T.N.A. Performs creditably in parliamentary elections" . Daily Mirror இம் மூலத்தில் இருந்து 28 April 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100428064301/http://www.dailymirror.lk/print/index.php/opinion1/8325-tna-performs-creditably-in-parliamentary-elections.html .
↑ "Tamil National Peoples Front launched in Jaffna" . தமிழ்நெட் . 1 March 2010. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=31285 .
↑ "Parliamentary General Election – 2010 Official Results" . Department of Elections, Sri Lanka. Archived from the original on 2015-04-05.
↑ Srinivasan, Meera (23 September 2013). "TNA gets massive mandate" . தி இந்து . http://www.thehindu.com/news/international/south-asia/tna-gets-massive-mandate/article5156461.ece .
↑ Aneez, Shihar (22 September 2013). "Sri Lanka's Tamil party sweeps polls, seeks trust from government" . ராய்ட்டர்ஸ் இம் மூலத்தில் இருந்து 27 செப்டம்பர் 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150927152047/http://www.reuters.com/article/2013/09/22/us-srilanka-election-idUSBRE98K01U20130922 .
↑ Doherty, Ben (23 September 2013). "Tamil Party wins in election landslide" . The Sydney Morning Herald . http://www.smh.com.au/world/tamil-party-wins-in-election-landslide-20130922-2u7wa.html .
↑ "Wigneswaran takes oath as Northern Province CM" . தி இந்து . இந்திய-ஆசிய செய்திச் சேவை . 9 October 2013. http://www.thehindu.com/news/international/south-asia/cm-wigneswaran-takes-oath-in-sri-lankas-northern-province/article5209907.ece .
↑ "Wigneswaran sworn-in as NPC CM" . Daily Mirror . 7 October 2013 இம் மூலத்தில் இருந்து 10 அக்டோபர் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131010190355/http://www.dailymirror.lk/caption-story/36694-wigneswaran-sworn-in-as-ncp-cm.html .
↑ "Sri Lanka poll: Tamil minister Wigneswaran says 'peace possible'" . BBC News . 7 October 2013. https://www.bbc.co.uk/news/world-asia-24179990 .
↑ "Tamil party endorses opposition in Lanka elections" . Gulf Times . 30 December 2014. http://www.gulf-times.com/sri%20lanka/251/details/421527/tamil-party-endorses-opposition-in-lanka-elections .
↑ Srinivasan, Meera (30 December 2014). "TNA pledges support to opposition’s Maithripala Sirisena" . தி இந்து . http://www.thehindu.com/news/international/south-asia/tamil-national-alliance-backs-opposition-candidate-in-sri-lanka-presidential-polls/article6738507.ece .
↑ Kasturi, Charu Sudan (21 January 2015). "Support given, now cautious hope" . தி டெலிகிராஃப் . http://www.telegraphindia.com/1150121/jsp/nation/story_9477.jsp .
↑ "Sri Lanka's main Tamil party puts conditions to join unity govt" . Global Times . Xinhua News Agency. 16 February 2015 இம் மூலத்தில் இருந்து 20 ஏப்ரல் 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210420233000/https://www.globaltimes.cn/content/907995.shtml .
↑ Karunarathne, Waruni (18 January 2015). "Above The Cabinet, For The People" . த சண்டே லீடர் இம் மூலத்தில் இருந்து 16 ஜனவரி 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200116210641/http://www.thesundayleader.lk/2015/01/18/above-the-cabinet-for-the-people/ .
↑ Somarathna, Rasika (5 March 2015). "'EPC power sharing similar to experimental unity govt'" . Daily News இம் மூலத்தில் இருந்து 2 April 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150402123328/http://www.dailynews.lk/?q=local%2Fepc-power-sharing-similar-experimental-unity-govt .
↑ Balachandran, P. K. (17 February 2015). "For The First Time in History, TNA Will Be in Eastern Province’ Board of Ministers" . தி நியூ இந்தியன் எக்சுபிரசு . http://www.newindianexpress.com/world/For-The-First-Time-in-History-TNA-Will-Be-in-Eastern-Province%E2%80%99-Board-of-Ministers/2015/02/17/article2673341.ece .
↑ Thambiah, Mirudhula (24 February 2015). "SLMC - TNA marriage in the East" . Ceylon Today இம் மூலத்தில் இருந்து 27 February 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150227103624/http://www.ceylontoday.lk/89-85616-news-detail-slmc-tna-marriage-in-the-east.html .
↑ Panchalingam, Ariram (3 March 2015). "New Eastern Provincial Council Ministers sworn in" . நியூஸ் பெர்ஸ்ட் இம் மூலத்தில் இருந்து 13 ஜூன் 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170613230617/http://newsfirst.lk/english/2015/03/just-in-new-eastern-provincial-ministers-sworn-in/81189 .
↑ "Eastern PC Ministers sworn in" . Hiru News . 3 March 2015. http://www.hirunews.lk/104692/eastern-pc-ministers-sworn-in .
↑ "Parliamentary Election - 17-08-2015 - Official Election Results All Island Results" . Department of Elections, Sri Lanka. Archived from the original on 2015-08-29.
↑ "Parliamentary Election - 17-08-2015 - Official Election Results Composition of the Parliament" . Department of Elections, Sri Lanka. Archived from the original on 2015-09-27.
↑ "Sampanthan new opposition leader" . The Daily Mirror (Sri Lanka) . 3 September 2015. http://www.dailymirror.lk/85819/sampanthan-new-opposition-leader .
↑ "R. Sampanthan appointed Opposition Leader" . The Nation . 3 September 2015 இம் மூலத்தில் இருந்து 27 செப்டம்பர் 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150927210719/http://nation.lk/online/2015/09/03/r-sampanthan-appointed-opposition-leader/ .
↑ "Sampanthan Chosen As New Leader Of The Opposition" . கொழும்பு டெலிகிராப். 3 செப்டம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 3 செப்டம்பர் 2015 .
↑ TNA’s Sampanthan becomes opposition leader in Sri Lankan parliament , தி இந்து , 3 செப்டம்பர் 2015
↑ "Ethnic Tamil lawmaker becomes opposition leader in Sri Lanka for first time in decades" . Fox News. 3 செப்டம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 3 செப்டம்பர் 2015 .
↑ "Tamil MP Sampanthan to lead Sri Lanka opposition" . பிபிசி . 3 செப்டம்பர் 2015. http://www.bbc.co.uk/news/world-asia-34136684 .
↑ "Provincial Council Elections 2012: Eastern Province" . இலங்கை தேர்தல் திணைக்களம். Archived from the original on 2013-06-21. பார்க்கப்பட்ட நாள் 2013-07-27 .
↑ "Provincial Council Elections 2013 : Northern Province" . இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original on 2013-09-21. பார்க்கப்பட்ட நாள் 2013-09-27 .
வெளி இணைப்புகள்
முக்கிய கட்சிகள் மூன்றாம் கட்சிகள்
நாடாளுமன்றத்திற்கு வெளியே முன்னாள் கட்சிகள் முன்னாள் அரசியல் கூட்டணிகள்