முல்லைத்தீவு மாவட்டம் (Mullaitivu District) இலங்கையின் வட மாகாணத்தின் 5 மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் தலைநகரம் முல்லைத்தீவு நகரமாகும். இது தேர்தல் நோக்கங்களுக்காக வன்னி தேர்தல் மாவட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இலங்கை பாராளுமன்றத்தில் 1 ஆசனத்தைக் கொண்டுள்ளது. நிர்வாகத்துக்காக 6 பிரதேச செயலர் பிரிவுகளாக வகுக்கப்பட்டுள்ளது. வவுனியா மாவட்டத்தில் பெரும்பகுதியையும், மன்னார், யாழ்ப்பாண மாவட்டங்களின் சிறு பகுதிகளையும் கொண்டு 1978 இல் உருவாக்கப்பட்ட புது மாவட்டமாகும். வன்னி இராச்சியம் என்று அழைக்கப்பட்ட பெரும்பகுதி முல்லைத்தீவு மாவட்டத்திலேயே அமைந்துள்ளது.
வட மாகாணத்தில் உள்ள மாவட்டங்களில் நிலப்பரப்பு அளவில் முதலிடத்தில் இருப்பது முல்லைத்தீவு மாவட்டமாகும்.
வடக்கே கிளிநொச்சியையும் கிழக்கே இந்துசமுத்திரத்தையும், மேற்கே மன்னாரையும், தெற்கே திருகோணமலை மற்றும் வவுனியாவையும் எல்லைகளாக கொண்ட ஒரு மாவட்டமாகும்.
சங்க கால நிலக்கூறுகளின் பண்பை ஒத்த நானிலத்தன்மை கொண்டதாக முல்லைத்தீவு காணப்படுகிறது. எடுத்துக்காட்டாக,
கூறலாம்.
உலர் வலயத்தில் அமைந்துள்ளதால் மிதமான வெப்ப நிலை காணப்படும். வடகீழ் பருவக்காற்றின் மூலம் அதிகளவிலும், தென்மேற்கு பருவக்காற்றின் மூலம் குறைந்தளவிலும் மழைகிடைப்பதால், ஒக்டோபர் முதல் ஜனவரி வரையான காலம், வெப்பநிலை குறைவாக காணப்படும்.
பொதுவாக வெப்பநிலை 23 பாகை செல்சியஸ் - 39.3 பாகை செல்சியஸ்என்ற வீச்சில் அமைந்திருக்கும்.சராசரி வருடாந்தம் மழைவீழ்ச்சி 1300மிமீ- 2416மிமீ ஆக இருக்கும்.
இங்கு நிலம் பரவலாக செங்கபில மண்ணும், செம்மஞ்சள் லற்றசோல் வகை மண்ணும் கொண்டதாக காணப்படுகின்றது. ஆனால், கடற்கரைகள் இல்மனைற் கலந்த மணல்மண் பரம்பல் கொண்டதாக அமைந்துள்ளன. மேற்கே புல்மோட்டையின் இல்மனைற் படிவுகளின் தொடர்ச்சிகள் முல்லைத்தீவு கடற்கரைகளில் காணக்கூடியதாக இருக்கும்.
இங்கு 4 பிரதான குளங்களும், 15 நடுத்தர குளங்களும், 192 சிறிய குளங்களுமாக 211 குளங்கள் காணப்படுகின்றன. மக்கள் பிரதானமாக விவசாயத்தை தொழிலாக கொண்டதால் மழை நீரைக்கொண்டு 3,893 ஹெக்ரெயரில் பெரும்போகத்தையும், குளத்து நீரைக்கொண்டு 455.5 சிறுபோகத்தையும் ஹெக்ரெயரில் நெற்செய்கையில் ஈடுபடுகின்றனர்.
கிழக்கு கடற்கரை 70கி.மீ நீண்டுள்ளது.இதில் கொக்கிளாய், நாயாறு, நந்திக்கடல், மாத்தளன் ஆகிய கடனீரேரிகளில் இறால், நண்டு, மீன்பிடி மேற்கொள்ளப்படுகின்றது.
இலங்கையிலேயே நிலப்பயன்பாட்டில் பெரும்பகுதி காடுகளால் நிறைந்துள்ள மாவட்டங்களில் முல்லைத்தீவு முக்கியமானது. இங்குள்ள காடுகளில், வைரமரங்களான, முதிரை, பாலை, வீரை, காட்டாமணக்கு, ஒதி முதலிய மரங்கள் இயற்கையாக காணப்படுகின்றன. அவற்றை விட பனைகளும், தென்னைகளும் கொண்ட தோப்புக்கள் நிறைய உள்ளன. தேக்கு மரங்கள் நாட்டப்பட்ட செயற்கை காடுகள் இங்கு நிறைய காணலாம்.(தேராவில் குளம்)
இன ரீதியாக தமிழர், முஸ்லிம்கள், சிங்களவர் என மூவின மக்கள் வாழ்கின்ற போதிலும் அதிகப்படியாக தமிழர் வாழ்கின்றனர். சிங்களவர்கள் மணலாறு பிரதசத்திலுள்ள கொக்கிளாய், கொக்குத்தொடுவாய் ஆகிய இடங்களிலும், முஸ்லிம்கள் கரைதுறைப்பற்று பிரதேசத்திலும் வாழ்கின்றனர்.
சமயரீதியாக சைவர்கள், இஸ்லாமியர், பௌத்தர்கள், கிறித்தவர்கள் என வாழ்கின்றனர்.
ஏனைய மாவட்டங்கள் போல் மாவட்ட செயலர் (அரச அதிபர்) அவர்களால் நிர்வகிக்கப்படும். மேலும், முல்லைத்தீவு மாவட்டம் 6 பிரதேசங்களாக பிரிக்கப்பட்டு பிரதேச செயலர்களால் (உதவி அரச அதிபர்) துணை நிர்வாகம் செய்யப்படுகிறது.[4] இந்த ஆறு பிரதேசங்களும் மேலும் 136 கிராம அலுவலர் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு கிராம அலுவலர்களால் நிருவகிக்கப்படுகின்றன.[4]
உள்ளூராட்சி நிர்வாக அலகுகளான நகரசபை, பட்டின சபை ஆகியவை முல்லைத்தீவில் இல்லை. இவற்றிற்கு அடுத்த நிலையில் உள்ள பிரதேச சபைகள் ஒவ்வொரு பிரதேச செயலக பிரிவிலும் உள்ளன. பிரதேச சபைகள் அரசியல் கட்சி சார்ந்த தலைவராலும், அரச பிரதிநிதியான செயலாளராலும் நிர்வகிக்கப்படும். தற்போதய நிலையில், உள்ளூராட்சி தேர்தல்கள் நடைபெறாததால் செயலாளர் மட்டுமே நிர்வகிக்கின்றார்.
முல்லைத்தீவு மாவட்டம் கல்வி நிர்வாகத்திற்காக துணுக்காய், முல்லைத்தீவு என 2 கல்வி வலயங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. மேலும் இவை ஒவ்வொரு பிரதேச செயலக பிரிவுக்கென 5 கல்விக்கோட்டங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளன.
அரச புள்ளிவிபரவியல் திணைக்கள அறிக்கையின்படி இங்கு 104 அரச பாடசாலைகள் உள்ளன. இவற்றில் 1AB தரத்தில் 6 பாடசாலைகளும், 1C தரத்தில் 12 பாடசாலைகளும், வகை 2 இல் 39 உம், வகை 3 இல் 47 உம் என அவை உள்ளன. இவற்றுள், தேசியபாடசாலை தரத்தில் முள்ளியவளை வித்தியானந்த கல்லூரி தரமுயர்த்தப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் 209 பதிவு பெற்ற இந்துக்கோயில்கள் உள்ளன.[7][8] அவற்றுள் சில: