இலங்கையின் ஒன்பது மாகாணப் பிரிவுகளில் மத்திய மாகாணமும் ஒன்று. இது இலங்கையின் மத்திய மலைப் பிரதேசத்தில் அமைந்துள்ளது. கண்டி இதன் தலை நகரமாகும். இது மாத்தளை, கண்டி, நுவரெலியா ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியுள்ளது.
வரலாறு
பிரித்தானிய ஆட்சியின் கீழ் மத்திய மாகாணமானது 1833இல் உருவானது. விடுதலை பெற்ற பின்னர், 1987ஆம் ஆண்டு வரை சட்டப்பூர்வ அங்கீகாரம் அல்லது அதிகாரமும் இதற்கு வழங்கப்படவில்லை.[1][2]